பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/41

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

௱௭௪

தொல்காப்பியம் - இளம்பூரணம்


["மன்ற ம]ரா அத்த பேஎமுதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉ மென்ப யாவதுங்
கொடிய ரல்லரெங் குன்றுகெழு நாடர்
பசைஇப் பசந்தன்று நுதலே

ஞெகிழிய ஞெகிழ்ந்தன்று தடமென் றோளே.” [குறுந் - அஎ]

என[வும்] வரும். பிரிந்தவழிக் கலங்கியதற்குச் செய்யுள்:— "வருவது கொல்லோ தானே வாரா தவணுறை மேவலி னமைவது கொல்லோ புனவர் கொள்ளியிற் புகல்வரு மஞ்ஞை யிருவி யிருந்த குருவி வெருவறப் பந்தாடு மகளிரிற் படர்தருங் குன்றுகெழு நாடனொடு சென்றவெ னெஞ்சே." [ஐங்குறு - ௨௯௫] [எனவும்,] அதுகொ றோழி காம நோயே வதிகுரு குறங்கு மின்னிலைப் புன்னை யுடைதிரைத் திவலை யரும்புந் தீநீர் மெல்லம் புலம்பன் பிரிந்தெனப் பல்லித ழுண்கண் பாடொல் லாவே." [குறுந் - ௫] எனவும், மணிநிற நெய்த லிருங்கழிச் சேர்ப்ப னணிநல முண்டகன்றா னென்றுகொ லெம்போற் றிணிமண லெக்கர்மே லோதம் பெயர்ந்து துணிமுந்நீர் துஞ்சா தது.” [ஐந்திணையெழு - ௬௰] எனவும், நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்ட லஞ்சுதும் வேபாக் கறிந்து.” [குறள் - ௧௧௨௮] எனவும், "கண்ணு[ள்]ளார் காத லவராகக் கண்ணு மெழுதேங் கரப்ப தறிந்து.” [குறள் - ௧௧௨எ] எனவும் வரும். உறங்காமையும் உண்ணாமையும் கோலஞ் செய்யாமையும் வருத்தம் பிறவுஞ் சொல்லுதல். இவ்வழி நீ வருந்தாதி நின்மாட்டு அன்பு பெரிதுடையன் எனத் தோழி ஆற்றுவித்த வழி ஆற்றாமையாற் கூறியதற்குச் செய்யுள்:— "சிறுதினை மேய்ந்த தறுகட் பன்றி துறுக லடுக்கத்துத் துணையொடு வதியு மிலங்குமலை நாடன் வரூஉ மருந்து மறியுங்கொ றோழியவன் விருப்பே.” [ஐங்குறு . ௨௬௨] எனவரும்.