௱௮௪
தொல்காப்பியம் - இளம்பூரணம்
“மன்றப் பலவின் சுளைவிழை தீங்கனி
யுண்டுவந்து மந்தி முலைவருடக்-கன்றமர்ந்
தாமா சுரக்கு மணிமலை நாடனை
யாமாப் பிரிவ திலம்.” [ஐந்திணையெழு - ௪]
[எனவரும்.]
ஏமஞ் சான்ற உவகைக்கண் கூறிய செய்யுள்:—
“ஓங்க லிறுவரைமேற் காந்தள் கடிகவினப் பாம்பென லோடி யுருமிடிப்பக் கண்டிரங்கும் பூங்குன்ற நாடன் புணர்ந்தவந் நாள்போல வீங்கு நெகிழ்ந்த வளை.” [திணைமொழி-௩]
[எனவரும்.]
பரத்தைமை தோன்ற வந்ததற்குச் செய்யுள்:—
கணங்கொ ளிடுமணற் காவி வருந்தப்
பிணங்கிரு மோட்ட திரைவந் தழிக்கு
மணங்க ழைம்பாலா ரூடலை யாங்கே
வணங்கி யுணர்ப்பான் றுறை [கலித்.௱௩௧]
என்னும் பாட்டினுள் தானூடினாளாகவும் மகிழ்ந்தவாறும் அவன்வயிற் பரத்தைமை கூறியவாறும் காண்க.
இச்சூத்திரத்தாற் சொல்லியது ‘மறைந்தவற் காண்டல்’ முதலாக ஓதப்பட்ட அறுவகைப் பொருண்மையும், ‘கைப்பட்டுக் கலங்கல்’ முதலாகக் ‘கூறியவாயில் கொள்ளாக்காலை’ ஈறாகவரும் மகிழ்ச்சியினால் மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழி எண்ணுதல் சான்ற அருமறையைச் சொல்லுதலும், இவ்வாறும் எண்ணந்தான் உரையாக்காலத்துத் தன்னுயிர் செல்லுமாறு உரைத்தலும், ‘வேற்றுவரைவு வரின் அது மாற்றுதல்’ முதலாகத் ‘தமர்தற்காத்த காரணப்பக்கம்’ ஈறாகத் தன் குறிபிழைக்க நிற்கப் பெறும் எனவும், அவ்வழித்தலைவன் வந்து பெயர்ந்துழிக் கலக்கமின்றித் தெளிதலும், ‘வழுவின்று நிலைஇய இயற்படு பொருள்’ முதலாக் ‘ஏமம் சான்ற உவகை’ ஈறாகத் தான் உரியளாகிய நெறியும் தலைவன் அயலாகிய நிலையும்போ லவரிற் சொல்லப்பெறும் எனவும் குறிப்பினு மிடத்தினு மல்லது வேட்கை நெறிப்பட்டவாறாக்த் தலைவிக்குக் கூற்று நிகழுமிடமுக்; உணர்த்தியவாறு.(௨௧)
௱௰.வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்
வரையா நாளிடை வந்தோன் முட்டினு
முரையெனத் தோழிக் குரைத்தற் கண்ணுந்
தானே கூறுங் காலமு முளவே.
இதுவும் தலைவிமாட்டுச் சொல் நிகழுமிடம் உணர்த்துதல் நுதலிற்று.
தலைவன் இயற்கைப்புணர்ச்சி புணர்ந்து நீங்குகின்றான் இன்னாள் வரைந்து கொள்வல் எனக்கூறித் தோழியிற்கூட்டத்திற்கு முயலாது தணந்தவழி யதனைத் தோழி ஐ[ய]ப்படுங் குறிப்புத்தோன்றாமை மறைந்தொழுகா நின்ற தலைவன் செவிலி முதலாயினாரை முட்டினவழியும் இவ்வொழுக்கத்தினை நின்றோழிக்கு உரையெனத் தலைவன் கூறியவழியும் தலைவி தானே கூறுங் காலமு முள என்றவாறு.