இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ளஅஅ தொல்காப்பியம்- இளம்பூர்ரணம்
யவன்வயிற் றோன்றிய கிளவியொடு தொகைஇ யனைநில வகையான் வரைதல் வேண்டினு மையச் செய்கை தாய்க்கெதிர் மறுத்துப் பொய்யென மாற்றி மெய்வழிக் கொடுப்பினு மவள்விலங் குறினுங் களம்பெறக் காட்டினும் பிறன்வரை வாயினு மவன்வரைவு மறுப்பினும் முன்னிலை யறனெனப் படுதலென் றிருவகைப் புரைதீர் கிளவி தாயிடைப் புகுப்பினும் வரைவுடன் பன்னோர்க் கடாவல் 2வேண்டினு மாங்கதன் றன்மையின் 3வன்புறை யுளப்படப் பாங்குற வந்த நாலெட்டு வகையினுந் தாங்கருஞ் சிறப்பிற் றோழி மேன. என்றது களவொழுக்கத்தின்கண் தோழிக்குரிய கிளவியெல்லாம் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று. நாற்றமு...நாட்டத்தானும் என்பது -நாற்றமுதலாகச் சொல்லப்பட்ட ஏழினானும் புணர்ச்சிக்கு முந்துற்ற நிலைமையை உட்கொண்டுவரும் மன நிகழ்ச்சி யேழினும் புணர்ச்சியுண்மையறிந்த பின்றை மெய்யினானும் பொய்யினானந் தலைவி குலத்திலுள்ளார் நிலைமையிற் பிழையாது பலவாகி வேறுபட்ட கவர்ந்த பொருண்மையையுடைய ஆராய்தற் கண்ணும் என்றவாறு. நாற்றம் என்பது - பூவினானும் சாந்தினானும் தலைவன் மாட்டுளதாகிய கலவியால் தலைவிமாட்டுளதாகிய நாறுதல். தோற்றம் என்பது - புணர்ச்சியான் வரும் பொற்பு. ஒழுக்கம் என்பது - ஆயத்தாரொடு வேண்டியவா றொழுகலன்றித் தன்னைப் பேணியொழுகுதல். உண்டி என்பது - உண்ணும் அளவிற் குறைத்தல். செய்வினை மறைத்தல் ஆவது - பூக்கொய்தலும் புனலாடலும் போலும் வினைகளைத் தோழியை மறைத்துத் தவிர்த்து நிகழ்த்துதல். அன்றியும் தலைவன் செய்த புணர்ச்சியாகிய கருமத்தினைப் புலப்படவிடாது தோழியை மறைத்தலும் என்றுமாம். செலவினும் என்பது - எத்திசையினும் சென்று விளையாடுவாள் ஒருதிசையை நோக்கிச் சேறல். பயில்வினும் என்பது ஓரிடத்துப் பயிலுதல். புணர்ச்சி எதிர்ப்பாடு ஆவது- புணர்வதற்கு முந்துற்ற காலம். உள்ளுறுத்தல் ஆவது - உட்கோடல். உணர்ச்சி ஏழாவது -நாற்றமுதலாகச் சொல்லப்பட்டவற்றால் வரும் மனநிகழ்ச்சி ஏழும். பல்வேறு கவர்பொருள் நாட்டம் என்பது - ஒன்றோடொன்று ஒவ்வாத வேறுபட்டனவாகி இருபொருள் பயக்கும் சொற்களாலே யாராய்தல்.
(பிரதி) - 1. வேண்டியு. 2. வேண்டியு. 3. வன்பொறை.