இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பொருளதிகாரம் - களவியல்
அவற்றுள் சில வருமாறு:- 'கண்ணுஞ் சேயரி பரந்தன்று நுதலு நுண்வியர் பொறித்து வண்டார்க்கும்மே வாங்கமை மென்றோன் மடந்தை யாங்கா யினள்கொ லென்றுமென் னெஞ்சே'[சிற்றெட்டகம்] இது தலைவி தோற்றங்கண்டு பாங்கி கூறியது. பிறவும் அன்ன. குறையுற்ற் கெதிரிய கிழவனை மறையுற என்பது - தலைவனது பெருமையான் நீக்கலும் என்றவாறு. 'இவனே, கான னண்ணிய காமர் சிறுகுடி நீநுறப் பெருங்கடல் கலந்த அன்புக்கு மீனெறி பரதவர் மகளே நீயே நெடுங்கொடி நுடங்கு நியம மூதூர்க் கடுந்தேர்ச் செல்வர் காதன்மகனே நிணச்சுற வுறுத்த வுணங்கல் வேண்டி யினப்புள் ளோப்பு மெமக்குர னெவனோ புலவு நாறுதுஞ் செலநின் றீமோ பெறுநீர் விளையுளெஞ் சிறுநல் வாழ்க்கை நும்மொடு புரைவதோ வன்றே யெம்ம னோரிற் செம்மலு முடைத்தே' [நற்றிணை -சரு] எனவரும். உலகுரைத் தொழில் என்பது - உலகத்தார் மகட்கொள்ளாமாறு கொள்ளெனக் கூறுதல், கேடீ ரெல்வளைக் கொழுமடற் கடந்த லரய்தொடி மடவரல் வேண்டுதி யாயிற் றெண்சுழிச் சேயிறாற் படூஉந் தண்கடற் சேர்ப்ப வரைந்தனை கொண்மோ. [ஐங்குறு--உசுகூ] இன்னும் உலகுரைத் தொழித்தல் என்றதனாற் கையுறைமறையுங் கொள்க. 'நீடுநீர்க் கான னெருநலு நித்திலங் கொண்டைய வந்தீர் கோடுயர் வெண்மணற் கொற்கையெம் மூரிவற்றாற் குறையிலேமியா மாடுங் கழங்கு மணிவிளக்கு ம்ம்மனையும் பாடி யவைப்பனவும் பந்தாடப் படுவனவும் பனிநீர் முத்தம்' அருமையின் அகற்சியும் என்பது - தலைவியைக் கிட்டுதற்கு அருமை கூறிய கற்றுதல்.