இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தொல்காப்பியம்-இளம்பூரணம்
ளகூய உதாரணம்-:- 'நெருநலு முன்னா ளெல்லையு மொருசிறைப் புதுவை யாகலி னதற்கெய்த நா[ணி] நேரிறை வளைத்தோணின் றோழி செய்த வாருயிர் வருத்தங் களையா யோவென வெற்குறை யுறுதி ராயிற் சொற்குறை யெம்பத்த் தெளிய ளல்ல ளெமக்கோர் கட்காண் கடவு ளல்லளோ பெரும வாய்கோன் மிளகின் மலயங் கொழுங்கொடி துஞ்சுபுலி வரிப்புறந் தைவரு மஞ்சுசூழ் மணிவரை மன்னவன் மகளே' எனவரும். அவளறி வுறுத்துப் புன்வாவென்றலும் என்பது - நின்னாற் காதலிக்கப்பட்டாட்குச் சென்று அறிவித்துப் பின்னர் என்மாட்டுவா என்றவாறு. அவற்றுள், நீயே சென்று அறிவி என்றதற்குச் செய்யுள்:- 'தன்னையுந் தானாணுஞ் சாயலாட் கீதுரைப்பி னென்னையு நாணப் படுங்கண்டா- யென்னைய வேயர்மென் றோளிக்கு வேறா யினியொருநா ணீயே யுரைத்து விடு' பின்வா வென்றதற்குச் செய்யுள்:- 'நாள்வேங்கை பொன்விளையும் நன்மலை நன்னாட தோள்வேங்கை போற்கொடிய ரென்னையர்- தோள்வேங்கை யன்னையால் வேங்கை யருந்தழையா மேலாமைக் கென்னையோ நாளை யெனிது' [ திணைமாலை -உய] எனவரும். பேதைமை யூட்டல் என்பது - நேரினும் அவள் அறிவாலொருத்தியல்ல்லள் என்று தலைவற்குக் கூறல். உதாரணம்:- 'நறுந்தண் டகரமெ வகுள மிவற்றை வெறும்புதல்போல் வேண்டாது வெட்டி - யெறிந்துழுது செந்தினை வித்துவார் தங்கை பிறர்நோய்க்கு நொந்தினைய வல்லளோ நோக்கு' [திணைமாலை - உச] இன்னும், பேதைமை யூட்டல் என்பதனால் தோழி தான் அறியாள் போலக் கூறுதலுங் கொள்க. உதாரணம்:- 'புன்றலை மந்திக் 1கல்லா வன்பறழ் குன்றுழை நண்ணிய முன்றிற் போகா (பிரதி) - 1. கல்லார்