பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காவது - க கற்பியல். பாசம். கற்பெனப் படுவது கரணமொடு புணரக் கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மாபினோர் கொடுப்பக்கொள் வதுவே: என்பது சூத்திரம். இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின், - கற்பியல் என்னும் பெயர்த்து. கற்புக்கு இலக்கணம் உணர்த்தினமையால் பெந்தபெயர். கற்பென்பது யாதோவெனின், அஃதாமாறு இச்சூத்திரத்தில் விளங்கும். இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், கற்பிலக்கணம் கூறுதல் நுதலிற்(று). கற்பென்று சொல்லப்படுவது, கரணத்தொடு பொருந்திக் கொள்ளுதற்குரிய மரபினையுடைய கிழவன் கொள்ளுதற்குரிய மரபினையுடைய கிழத்தியைக் கொடுத்தற் குரிய மரபினையுடையார் கொடுப்பக் கொள்வது என்றவாறு. கொளற்குரி மரபின் என்ப தனைக் கிழத்தி என்பதனோடுங் கூட்டியுரைக்க, களவின்கண் ஒத்தாரிருவர் வேட்கைக்கு நியாத் கூடி ஒழுகியவழிக் கரணத்தின் அமையாது இல்லறம் நடத்தலாமோ எனின், அஃதாகாதென்றற்குக் கரணமொடு புணர என்றார். காரணம் என்பது.-வதுவுைச் சடங்கு. கொளற்குரிய மரயிற் கிழவோன் என்றத னால், ஒத்தகுலத்தானும் (உயர்ந்தகுலத்தானும்) என்று கொள்க. கொளற்குரிய மரபிற் கிழத்தி யென்றதனால், ஒத்தகுலத்தாளும் இழிந்த குலத்தாளும் என்று கொள்க. கொடைக்குரிய மரபினோர் என்றதனால், தந்தையும் தாயும் தன்னையரும் மாதுலனும் இவரில்லா தவழிச் சான்றோரும் தெய்வமும் என்று கொள்க. கொடுப்பக் கொள்வது கற்பு என் றமையால், அது கொடுக்குங்கால், களவு வெளிப்பட்டவழியும் களவு வெளிப்படாதவழி யும், மெய்யுறு புணர்ச்சி யின்றி உள்ளப்புணர்ச்சியான் உரிமைபூண்டவழியும் கொள்ளப் பெறும் எனக்கொள்க. களவியற் சூத்திரத் துள், 'இன்பமும் பொருளு மதனு மென்றாங் கன்பொடு புணர்ந்த' (களவியல்-6] என்பதனைத் தந்துரைத்து, ஐந்திணை மருங்கிற் கற் பெனப்படுவது எனக்கூட்டுக அஃதேல், கொடுப்பக் கொள்வது கற்பாயின் பிரம முதலிய எண்வகைம் கயும் கொள்க: 'கொடுப்போ. ரின்றியுக் கரண் முண்டே - புணர்ந்துடன் போகிய காலை யான்' (என்னும்] இது கற்பாகுமோ எனின், அவையும் கற்பாதல் ஒக்குமேனும் கந் திருவம் போல ஒத்த : அன்புடையார் ஆதல் ஒருதலையன்மையின் கைக்கிளை பெருந்திணைப்பாற்படும். ஈண்டு: ஐந்திணை தழுவிய அகத்திணையே களவு கற்பு எனப் பகுத்தார் என்று கொள்க. (க) ராசக. கொடுப்போ ரின்றியுங் காண முண்டே புணர்ந் துடன் போகிப் காலை யான. இது மேலதற்கோர் புறனடை. கொடுப்போரின்றியும் கரண நிகழ்ச்சி உண்டு; புணர்ந் துடன் போகிய காலத் D என்றவாறு. எனவே கற்பிற்குக் கரண . நிகழ்ச்சி ஒரு தலையாயிற்று. . இதனானே கொடுப்போ ரீல்வழியும் கரண நிகழ்ச்சி யுண்மையும் ஒழுக்கக்குறைபாடு இன் மையும் கொள்க.