பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

ஆலயப் பிரவேச உரிமை.

 

களுக்காகவே இந் நூல் எழுதப்படுகின்றது. வரிசையாகக் கோர்ட்டுத் தீர்ப்புகளை மேற்கோள் காட்டி, அவை சகல பிரச்னைகளையும் எக் காலத்துக்கும் தீர்த்துவிட்டதாக வக்கீல்கள் பூச்சாண்டி காட்டி சாதாரண மக்களைப் பயமுறுத்துவதுமுண்டு. ஆகையினால், கோர்ட்டுத் தீர்ப்பு என்பது என்ன, எந்தப் பொதுப் பிரச்னையையுந் தீர்க்கும் விஷயத்தில் அது எவ்வளவு தூரம் பயன்படும் என்பதையும் குறிப்பிடுவது நலமாகும். "ஒரு வழக்கானது அதில் என்ன தீர்மானிக்கப்படுகின்றதோ அதற்கு மட்டுமே அத்தாட்சியாகும். தர்க்க ரீதியாக அதிலிருந்து அனுமானிக்கக்கூடிய ஒன்றிற்கு அதை அத்தாட்சியாக எடுத்துக் காட்டமுடியுமென்பதை நான் முற்றும் மறுக்கிறேன். அவ்விதம் அத்தாட்சியாக எடுத்துக் காட்டமுடியுமென்று நினைப்பது சட்டம் நியாயத்தையொட்டியதுதான் என்று கருதியேயாகும். உண்மை அப்படியல்ல; ஏனெனில் சட்டம் எப்பொழுதும் தர்க்க சாஸ்திர முறையைத் தழுவியதே யல்லவென்பதை ஒவ்வொரு வழக்கறிஞரும் ஒப்புக்கொண்டு தீர வேண்டும்" என்று இங்கிலாந்தில் உயர்தர நீதிபதியாயிருந்த லார்டு ஹால்ஸ்பரி என்பார் சொல்லியிருக்கின்றார். எளிதில் ஒரு முடிவுக்கு வர இயலாத சிக்கலான விஷயங்கள் வரும்பொழுது, நீதிபதிகள் இந்த அபிப்பிராயத்தையே தமக்குத் தஞ்சமாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். நியாயவிசாரணைசெய்வது அதிகக்கஷ்டமாக இருக்கும்போதும் - அடிக்கடி அவ்வாறேயிருக்கின்றது - தனித்த மனப்பான்மை சட்டத்தினுள் புகும்போதும், சட்டம் எவ்விதத்திலும் தர்க்க சாஸ்திர முறைக்கு முரண்பட்டதாகவேயிருக்கின்றது; ஒவ்வொரு வக்கீலுக்கும் இது தெரிந்த விஷயந்தான்.

இந்த உண்மையை மனத்திலிருத்திக்கொண்டு, இந்துக்களென்றும், இந்து சட்டத்திற்குட்பட்டவர்களென்றும் கருதப்படுகிற தாழ்த்தப்பட்டவர்களென்போரையும், தீண்டத்தகாதவரென்போரையும் பொதுக்கோவில்களில் நுழையவிடாதபடி தடுக்க, சட்டத்திற்குப் பொருத்தமான காரணங்கள் ஏதாவது இருக்கின்றதா என்று ஆராய்வோம்.

பாமர மக்களை ஏமாற்றுவதற்காக வக்கீல்கள் "பண்டைக் காலத்துப் பழக்க வழக்கம்" என்ற பித்தலாட்டத்தைக் கையாள்