பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உ ஆலயப் பிரவேச உரிமை. 51 "உயர்சாதி இந்துக்கள் கிறிஸ்துவ மதத்தைத் தழுவிய பிற குங்கூடத் "தமக்கு உண்டென நினைத்திருக்கும் சாதி உரிமைகளை எவ்விதத்திலும் மாற்றவில்லை; கடவுளுடைய சந்நிதானத்தில் எல்லாமக்களும் சமமானவர் என்ற தத்துவமானது கிறிஸ்துவ மதத்துக்கும், எனைய மதங்களுக்கும் அடிப்படையான தத்துவ மாகும். அப்படியிருந்தும் அவர்கள் மதம் மாறிய பிறகுங்கூட இந்த தத்துவத்தைக் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை" யென்று ஜஸ்டிஸ் நேப்பியர் அவர்கள் அபிப்பிராயப்பட்டுள்ளார். "பிறப்பு காரணமாக மக்களைத் தீண்டத்தக்கவரென்றும், தீண்டத்தகாதவ சென்றும் பிளவு படுத்தி, அந்தப்பிரிவினையைக் கடவுள் சந்நிதா னத்திலும் சாஸ்திரங்களின் (அவை உண்மையான சாஸ்திரங்க ளாயினுஞ் சரி, போலி சாஸ்திரங்களாயினுஞ்சரி) உதவியைக் கொண்டு இந்துக்களைப்போல நிலை நிறுத்தப்பார்ப்பது வாதிகளுக்கு (கிறிஸ்துவ மதத்திற் சேர்ந்த சாதிஇந்துக்கள்) இயலாத காரியம்” என அதே வழக்கில் ஜஸ்டிஸ் சதாசிவ ஐயரவர்கள் குறிப்பிட் டுள்ளார். ஒரு தீவிர சீர்திருத்த வாதியாயிருந்த ஜஸ்டிஸ் சதாசிவ ஐயரவர்கள் மேற்கண்ட வழக்கில் இவ்வாறு கூறியிருந்தபோதி லும், போலி சாஸ்திரங்களை ஆதாரமாகக்கொண்ட அர்த்தமற்ற உயர்வு தாழ்வுகளையும், நியாயமற்ற பழக்கவழக்கங்களையும், ஒப் புக் கொள்ளும்படி அவர் எவ்வாறு கட்டுப்படவேண்டி நேர்ந்த தென்பதைப் பின்னால் அறிவோம். 'ஆசாரமானது நியாயத்திற்கு விரோதமாயிருப்பினும், (பல இந்துமத ஆசாரங்களைப் போன்று) உண்மையான அல்லது போலியான மத நூற்களின் ஆதாரத்தைக் கொண்டு சில சமயம் நீதிஸ்தலங்களில் வெற்றிபெற்றுவிடுகின் றது" என்று ஸர் சதாசிவ ஐயரவர்கள் சொல்லியிருக்கின்றார்.