பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்புப் பாயிரம்.

பறை கொட்ட வஞ்சிவிழி விளர்ப்ப, வேற்றிடி போல விடை யற திரட்டுங், கூற்றுற ழெறுழ்வலி யேற்றுரி முரகினன், பலப்பல வரசர் நலப்பமே லுயர்த்த, பைங்கொடி யடங்கலும் பணி செழு நிற்பக், திகழ்ந்துமே லோங்கிச் சிறந்தெழிற் சயமாக, ளரவிக் கிணையதாங் காவிக் கொடியினோன், பீடா ருலகங் கோடா நெறியினிற், குலவுற நடாத்து நிலவு செய் கோவினன், றண்ணிய நலக்கெழு புண்ணிய மேரு, நிறைதரு கருணைக் குறையுணல் லின்பக், திசையெறி கல்விக் கரைபொரு கடனறுந் , தண்ணளி யரும்பிப் புண்ணிய மலர்ந்து, நன்றிபல பழுத்து நின்றருண தாரு, நித்திய வருட்சிவ பத்தியின் பைங்கூழ், புகழ்தரு மிரவலர் நிகழ்தரு குறிப்பறிந் , துதவிடு சீச்சர லதுலசிந் தாமணி, விளங்குறு முயிரெனு மிளங்கோ தனங்கள், கூட்டமிட் டருந்தி யேப்பமிட் டுவப் பக், கண்ணிய வின்சுவை நண்ணிய வருட்பா, லேமமொடு சுரக்குங் காம தேனு, பொய்வகைச் சமயப் புதைபிருள் புதை பட, மெய்வகை யொளிவிரி சைவ சிகாமணி, யென் றுபற் பலரு மெ டுத்தினி தியம்பக், குன்றலி னிலமகள் குதூகலிப் பெய்தத் , தவஞா னம்பெறு சிவஞான தேவ , ரியற்றிய தவத்தா னயக்கத் தோன்றீயோன், பொதியமிழ் கடுக்கை யொடு மதிதவழ் சடில, மன்னு சாமிதன் மலர்க்கழல் பழிச் சும், பொன்னு சாமிமால் புகன்றன னாக, வடங்கிய தழனா வடங்கலு திமிர்த்தெனத் , தளிர்த்தளி மொய்ப்பத் நுனித் தலர் தேமாங், கனிசிறு வளியாற் கமலமென் பொகுட்டிற், றக்குறீஇ யுடைந்து வாக்குறு பைந்தே, னீர்ந்தட நிரப்பு மீழ நன் னாட்டி, னிலமகண் மூகமெனக் குலவும்யாழ்ப் பாணத்,

91