பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவள்ளுவர் திருக்குறள்.

தன்மையும் பெருமையும் பொருந்திய வைர வாள் போன்ற கொம்புகளையுடைய யானைக் கூட்டங்கள் வேதனையோடு வாய் விட்டு அலறித் திகைத்து ஓட்டம் எடுத்துச் செல்வதற்கு இடமின்றித் திசைகள் தோறும் இமையாத கண்களுடன் வெட்கித் தளர்வோடு நிற்க, வெற்றியுடன் இறுமாப் படைந்து விளங்கி மரத்தைச் சொரிந்து, ஒப்பற்று உலாவுகின்ற புள்ளி முகத்தை கொண்ட யானைகளை உடையவன், கடையுகத்து... முரசினன் -- ஊழி காலத்தில் கரை கடந்து பொங்கிய பெரிய கடலென்று சொல்லும்படியாகப் படைகள் பொருந்திய பகைவர்கள் தோல்வியுற்று நெஞ்சு பறையடிக்கப் பயந்து கண்கள் வெளிர்க்க இடியேறுபோல இடை விடாது முழங்கு கின்ற எமன் ஒத்த மிக்க வலியையுடைய எருதின் தோலாலாகிய படை யுடையவன், பலப்பல... கொடியினன்- பலபல அரசர்கள் நன்மையாக மேலே தூக்கிய பச்சைக் கொடிகளெல்லாம் பணி செய்து நிற்க விளங்கி மேலே உயர்ந்து சிறந்து, அழகிய வீர இலக்குமியின் உயிருக்கு ஒப்பாகும் காவிக் கொடியை யுடையவன், பீடா ரூலகம் ...செங்கோலினன் -- பெருமை நிறைந்த உலகத்தைக் கோணாத வழியில் மகிழ்வற நடாத்தி நிலவுகின்ற செங்கோலை யுடையவன், தன்ணிய...மேரு--அருளோடு கூடிய நன்மைகள் மிகுந்த புண்ணியங்களைப் புரிந்து மேரு மலைபோல் விளங்குகின்றவன், நிறைதரு... தாரு --நிறைந்த கருணை தங்கு தற்கு ஓர் உடல்போன்றவன், நல்ல இன்ப அலைகளை வீசுகின்ற கல்வி யென்னும் கரையை மோதுகின்ற கடல் போன்றவன், நல்ல கிருபை அரும்பிப் புண்ணியங்கள் மலர்ந்து நன்மைகள் பல பழுத்து நின்ற நற்குண விருக்ஷம் போன்றவன், நித்திய... சிந்தாமணி--அழியாத அருளையுடைய சிறு பத்தியாகிய பசும் பயிர் போன்றவன், (தன்னைப்)புகழும் இரவலாது குறிப்பை அறிந்து உதவுகின்ற சிறப்பு நிறைந்த நிகரற்ற சிந்தாமணி போன்றவன், விளங் குறும்...காமதேனு விளங்குகின்ற உயிர்களாகிய இளம் பசுக் 06

. ,

96