பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Expression error: Unrecognized word "oddpage".

      சிறப்புப் பாயிரம்
கன்றுகள் கூட்ட மிட்டுக் குடித்து ஏப்பமிட்டுக் களிக்க விரும்பிய இனிய சுவை பொருந்திய அருளாகிய பாலை உவப்பொடு கரக்கின்ற காமதேனு போன்றவன், பொய்வகை...தோன்றியோன்---பொய்வகைச் சமயங்களாகிய கரிய இருள் ஒழிந்துபோக மெய் வகை ஒளியை விரிக்கின்ற சைவ சிகாமணி யென்று பலரும் எடுத்து இனிமையாகச் சொல்லக் குறைதல் இல்லாத பூமாதேவி களிப்படையத் தவ ஞானத்தைப் பெற்ற சிவஞானத் தேவர் செய்த தவத்தால் (யாவரும்) விரும்பும்படியாக அவதரித்தவன், பொதியமிழ்பால் காளி - கட்டவிழ்ந்த கொன்றை மலரோடு சந்திரன் தவழ்கின்ற சடை யையுடைய என்றுமுள்ள சிவபெருமானது மலர்ப்பாதங்களைப் போற்றும் பொன்னுச்சாமிப் பெரியோன் சொன்னானக, அடங்கியிருந்த நெருப்பு (த்தன ) ஈவை யெல்லாம் நீட்டிநாற்போல தனிச்சு விட்டு வண்டுகள் மொய்க்கத் தேன் துளிகளைச் சொரிந்து மலர்கின்ற தித்திப்பான மாமரக் கனிகள் இனங் காற்றால் தாமரையின் மெல்லிய - கொட்டையில் தாக்கி உடைந்து ஒழுக்குகின்ற பசுந்தேன் குளிர்ந்த குளங்களை நிரப்புகின்ற ஈழ நாடு என்னும் நல்ல காட்டில், பூமாதேவியின் முகம்போல் விளங்குகின்ற யாழ்ப்பாணத்தில், அதிக வளம் நிறைந்து, மறைதல் இல்லாத பல நூல்களிலும் வல்லவர்கள் புகழ்கின்ற நல்லூரை ஆள்கின்றவன், எந்தலில்... வந்தோன்-கெடுதல் இல்லாத அழகு பொருந்திய கர்த வேம் என்னும் பெரியோன் பெரி தும் மகிழ்ந்து இயற்றிய அருமையான மெய்த் தவத்தால் பொறுமை, தண்ணளி, சாந்தம், திண்மை, ஈகை, வாய்மை என்ற இந்நற் குணங்கள் ஒரு நிலையான உருவத்தை எடுத்து வந்தன வென்று யாவரும் போற்றும்படியாக வந்தவன், கல்வியங் கடலை... கருத்தினன் - கல்வியாகிய கடலைக் கடக்கக் கருதியவர்களுக்கு ஒப்பற்ற புகழ் பொருத்திய பெரிய தெப்பம் போலக் குற்றமற நிற்பவன், இரண்டு வகை பிரமச்சரியங்களில் மயக்கத்தில் செலுத்தாத ஈயிட்டிக பிரமச்

97 13.

97