பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவள்ளுவர் திருக்குறள்.

பொருள். பொறிவாயில் ஐந்தும் அவித்தான்- பொறிவாயில் (ஐந்தின் புலன்) ஐந்தும் ஒழித்தவனது, பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார் - குற்றமற்ற நெறியின் கண் (நிலையாக) நின்றவர், நீடு வாழ்வார்- (வீட்டுலகின் கண்) நெடுங்காலம் வாழ்வர்.

அகலம். பொறி வாயில் ஐந்தாவன:- மெய், வாய், கண், மூக்கு, செவி. புலன் ஐந்தாவன:-ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை. தீர் என்பது வினைத்தொகை. ஐந்தும் என்பதன் உம்மை செய்யுள் விகாரத்தால் கெட்டது.

கருத்து.கடவுளை உணர்ந்தார் வீட்டினை அடைவர்.

எ. தனக்குவமை யில்லாதான் றாள்சேர்ந்தார்க் கல்லான் மனக்கவலை மாற்ற லரிது.

பொருள். தனக்கு உவமை இல்லாதான்- தனக்கு ஒப்பு இல்லாதவனது, தான் சேர்த்தார்க்கு அல்லால் (ஏனையோர்க்கு)-அடிகளைச் சேர்ந்தவர்க்கு அல்லாமல் மற்றையோர்க்கு, மனக் கவலை மாற்றல் அரிது. - உள்ளக் கவலையை நீக்குதல் அரிது.

அகலம். " ஏனையோர்க்கு' என்பது சொல்லெச்சம். ‘சொல்லெச்சம்' என்பது சொல் குறைந்து நிற்றல். அரிது என்பது இயலாது என்னும் பொருட்டு. நச்சர் பாடம் ‘தாள் சேர்ந்தா ரல்லார்’.

கருந்து. கடவுளை உணர்ந்தவர்க்குக் கவலை இல்லை.

அ.அறவாழி யந்தணன் றாள்சேர்ந்தார்க் கல்லாற்
பிறவாழி நீந்த லரிது.

பொருள். அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் (ஏனையோர்க்கு) - அறக் கடலின் அழகிய தண்மையை யுடையவனது அடிகளைச் சேர்ந்தவர்க்கு அல்லாமல் மற்றையோர்க்கு, பிற ஆழி நீந்தல் அரிது - மறக் கடலைக் கடத்தல் அரிது. -

104