பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இடைப் பாயிரம்.

  • - பொருள். விசம்பின் துளி வீழின் அல்லால்-விண்ணி

னின்று (மழைத்) துளி வீழின் அல்லாமல், பசும் புல் தலை காண்பத ரிது-(இவ் வுலகின் கண் ஓர் அறிவுயிராகிய) பச்சைப் புல்லின் தலையைக் காணல் அரிது. அகலம். மழை இன்றேல் ஓர் அறி வுயிரையும் காணமுடியா தென்ற வாறு, மற்று, ஆங்கு, எ என்பன அசைகள், பசி காண்பது இன்மைப் பொருள் குறித்து நின்றது, தருமர் பாடம் மற்றெங்கும்'. தாமத்தர் பாடம் - தளிர்காண் பரிது'. கருத்து. மழை இல்லையேல், பசும் புல்லும் இல்லையாம், 18. 67. நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி தானல்கா தாகி விடின். பொருள். எழிலி தடிந்து நல்கா(த)து ஆகிவிடின் -மேகம் மின்னி (மழையினை )வழங்காதது ஆகிடின், செழுங் கடலும் தன் நீர்மை குன்றும்-நெடிய கடலும் தன் பெருமையிற் குறையும்.

  • அகலம். நல்காதது என்பதன் தகரம் செய்யுள் விகாரத்தால் கெட்டது. தான் என்பது அசை. மழை இல்லையாயின், முத்து, பவளம், முதலியன உண்டாகா வாகலான், பெருங் கடலும் தன்னீர்மை குன்றும் என்றார்.

கருத்து. மழை இல்லையேல், பெருங் கடலும் பெருமை குன்றும். அ. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கு மீண்டு. பொருள். வானம் வறக்குமேல்-- மேகம் வறளுமேல், ஈண்டு வானவா்க்கு சிறப்பொடு பூசனை செல்லாது-இவ் வுலகின்கண்

109