பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/123

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இடைப் பாயிரம்.

  • யானைகளையும் (தீய புலன்களில் செல்லாது.) காப்பவன், - ஓர் வரன்

என்னும் வைப்பிற்கு வித்து - ஒப்பற்ற வரன் என்னும் கனிக்கு வித்து.

அகலம். தோட்டி என்றதனால், ஐந்து என்பதற்கு ஐந்து யானைகள் என்று பொருள் உரைக்கப் பெற்றது. வரன்- முத்தரில் உயர்த்த நிலையிலுள்ளவன்; வித்து அவனுக்குத் தாழ்ந்த நிலையிலுள்ளவன். வித்து என்றமையால் வைப்பு என்பதற்குக் கனி என்றும், வரனது நிலை ஒப்பற்றதாகலான் ஓர் என்பதை 'வரன்' பின் சேர்த்தும் பொருள்கள் உரைக்கப்பட்டன, தாமத்தர் பாடம் - தோட்டியால்', தருமர், மணக்குடவர், தாமத்தர் பாடம் 'வைப்புக்கோர்', வரனென்னும் வைப்பிற்கோர் வித்து' என்பதற்கு ' எல்லா நிலங்களிலும் உயர்ந்த வீட்டு நிலத்திற்கு ஓர் வித்து' என்று உரைப்பாரும் உளர்,

கருத்து. ஐம்பொறிகளையும் காப்பவன் வீட்டினை அடைவன்.

'இ.

ஐந்தவித்தா னாற்ற லகல்விசும்பு ளார்கோமா
     இந்திரனே சாலுங் கரி.

பொருள், ஐந்து அவித்தான் ஆற்றற்கு-ஜம்புலன்களையும் ஒழித்தவனது வலிமைக்கு, அகல் விசும்பு உளார் கோமான் இந்திரனே சாலும் கரி- அகன்ற வானின்கண் உள்ள அமரரது வேந்தனாகிய இந்திரனே அமையும் சான்று.

அகலம், ஐந்தும் என்பதன் முற்றும்மையும் ஆற்றற்கு என்ப தன் நான்கனுருபும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. புலனைந்தும் அவித்த முனிவன் ஒருவனால் சாப மேற்றுத் தான் வருந்தின தன்மையை இந்திரன். பகர்வதனால், அவன் அமையும் சான்று

113