பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள்-அறப்பால்.

உ. அறத்தினூங் காக்கமு மில்லை யதனை மறத்தலினூஉங் கில்லை கேடு.

பொருள் ; அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை--அறத்தின் மிக்க நல்வினையும் இல்லை; அதனை மறத்தலின் ஊங்கு கேடும் இல்லை-அதனை மறத்தலின் மிக்க திவினையும் இல்லை.

அகலம். கேடும் என்பதன் உம்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. ஆக்கம், கேடு என்பன ஆகுபெயர்கள், அவற்றைத் தரும் வினைகளுக்கு ஆயினமையால். மணக்குடவர், தாமத்தர் பாடம் * மறத்தலினூங் கில்லையாம்.

கருத்து . அறத்தின் மேம்பட்ட நல்வினை இல்லை; அதனைச் செய்யாது விடுதலிற் கீழ்ப்பட்ட தீவினை இல்லை.

கூ. ஒல்லும் வகையான் அறவினை யோவாதே செல்லும்வா யெல்லாம் செயல்.

பொருள் : செல்லும் வாய் எல்லாம் --செய்யக் கூடும் இடத்திலெல்லாம், ஒல்லும் வகையான்-(எனக்கு) இயலும் அளவினால், ஓவாது அறவினை செயல் (ஒருவன்) இடைவிடாது அறவினையைச் செய்க.

அகலம். ஏகாரம் ஈற்றசை. அறவினை-நல்வினை. ஆற்றுந்துணையா லறஞ் செய்கை முன்னினது. "-இனியவை நாற்பது. தாமத்தர் பாடம் ' ஒல்லும்வா யெல்லாம்',

கருத்து. செய்யக்கூடிய இடங்களிலெல்லாம் அறவினையை இடைவிடாது செய்க.

சு. மனத்துக்கண் மாசில னால தனைத்தற னாகுல நீர பிற. -