பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உரைப் பாயிரம்

திருக்குறளுக்கு உரை சொல்லியவர்களும், எல்லை மிகுந்தும் எல்லை குறைந்தும் உரை எழுதியவர்களும் பலர் என்பதும், எல்லை மிகாதும் எல்லை குறையாதும் எல்லைப்படி உரை எழுதியவர்கள் பதின்மர் என்பதும், "தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிமே லழகர், பரிதி, திருமலையர், மல்லர், கலிப்பெருமாள், காளிங்கர் வள்ளுவர் நூற்; கெல்லை யுரையெழுதி னோர்" என்னும் வெண்பாவால் விளங்கும்.

இவ் எல்லை உரைகளுள் பரிமேலழக ருரையும், மணக்குடவ ருரையும் அச்சாகித் தமிழ் நாட்டில் நிலவுகின்றன. இவை தவிர, வேறு மூன்று உரைகள் கையெழுத்துப் பிரதிகளாகத் தமிழ்நாட்டில் சென்னை அரசாங்கக் கையெழுத்துப் புத்தகசாலை முதலிய சிற் சில இடங்களில் காணப்படுகின்றன. அவற்றிற் காணப்படும் சமயக் கோட்பாடு, தமிழ் நடை முதலியவற்றைப் பார்த்து, யான் அவற்றைத் தரும ருரை, தாமத்த ருரை, நச்ச ருரை எனக் கருதுகின்றேன். அவை முறையே அவ்வுரை யாசிரியர்களால் இயற்றப் பெற்றவை என்பதற்கு வேறு சான்று ஒன்றும் இதுகாறும் கிடைத்திலது. ஆயினும், அவ் உரைகளிற் கண்ட குறட் பாடங்களை யான் எனது உரையில் குறிக்கும் இடங்களில் அவ் உரையாசிரியர்கள் பாடங்கள் எனவே குறித்துள்ளேன். இவ் ஐந்து உரைகளிலும் திருக்குறளின் சில அதிகாரப் பெயர்களும் வரிசைகளும், அதிகாரக் குறள்களின் வரிசைகளும் வெவ்வேறா யிருக்கின்றன.

இவ் உரைகளெல்லாம் கற்றற்குப் பெரியனவாகவும், அறிதற்கு அரிய தமிழ் நடையில் எழுதப் பெற்றன வாக

5