பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் - அறப்பால். சு.குழலினிதி யாழினி தென்பதம் மக்கண் மழலைச்சொற் கேளா தவர். பொருள். தம் மக்கன் மழலை சொல் கேணாதவரே - தமது மக்களுடைய மழலைச் சொல்லைக் கேள்ளதவரே, குழல் இனிது, யாழ் இனிது என்ப-குழலிசை இனிது வாழிசை இனிது என்று சொல்வர். அகலம். குழல், யாழ் நஎன்பன ஆகுபெயர்கள், அவற்றின் இசைகளுக்கு ஆயினமையால், தருமர். தாமத்தர் பாடம் ' என்பர் தம்' மற்றை மூவர் பாடம் ' என்பதம்'. ஏகாரம் கெட்டது, கருத்து. தம் மக்கள் மழலைச் சொல் குழலினும் யாழினும் இனிது. எ. தந்தை மகற்காற்று நன்றி யவையத்து முத்தி யிருப்பச் செயல். 86. பொருள். தச்தை மகற்கு ஆற்றும் ஈன்றி-தச்தை மகலுக் குச் செய்யும் உதவி, அனவயத்து முந்தி இருப்ப செயல்—(சான்றோர்) அவையின்கண் முன்னே இருக்கும்படியாகச் செய்தல், அகலம். முன்னே இருக்கும்படியாகச் செய்தலாவது, முன்னே இருத்தற்குரிய கவ்வி, ஒழுக்கம், முதலியவற்றை அளித்தல். முன்னே- முதன்மையான இடத்தில், 'ஈன்றி' என்ற சொல்லை வழங்கினமை யால், அவ்வாறு கல்வி முதலியவற்றைத் தச்தை அளித்தமையை மகன் செய்ய்கன்றியாகக் கருசல் வேண்டும் என்பது பெற்றாம். கருத்து. மக்களுக்குக் கல்வியும் ஒழுக்கமும் கற்பித்தல் பெற் னோர் கடமை. அ. தம்மிற்றம் மக்க ளறிவுடைமை மாநிலத்து மன்னுவிர்க் கெல்லா மினிது. 37. 4

140

140