பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருக்குறள் - அறப்பால். அதனிலும் தன் மகனைச் சான்றோன் எனப் பிதர் கூறக் கேட்ட பொழுது உதசம் உவப்புப் பெரிதென்பதும் பெறப் பட்டன. உவகை உள்ளக் களிப்பு. பெண் ணியம்பால் தானாக அறியா மையின் கேட்ட தாயெனக் கூறினார்" என்று உரைப்பாரும் உயார். பெண்ணின் இயல்பு நானாக அறியாமை என்பது அறிவிலார்' கூடற் தென அம் அவசயை மறுக்க. கருத்து. தன் மகன் கல்வியும், அறிவும், ஒழுங்கமும் நிறைந்த வன் என்று பிறர் பேசக் கேட்ட தாய் பேருவகை எய்துவன். 39. மகன்றந்தைக் காற்று முதலி பிவன்றந்தை பென்னோற்றான் கொல்லெனுஞ் சொல். பொருள். மான் தந்தைக்கு ஆற்றும் உதவி மகன் தந்தைக் குச் செய்யும் உதவி, இவன் தந்தை என் கோற்றான் என்னும் சொன் (ஆக்கு,தல்)' (இவனைப் பெறுவதற்கு) இவன் தந்தை யாது தவம் புரிந்தான்' என்று (பிறர்) சொல்லும் சொல்லை உண்டாக்குதல். அகலம். என் என்பது என் கோன்பு எனப் பொருள் பட நின்றது. கோன்பு-தவம். ஆக்குதல் என்பது சொல்லெச்சம். கொல்' 'அசை', 'சொல்' இரண்டாம் வேற்றுமைத் தொகை. 'இவன் தந்தை என்னோற்றான்' என்பது பிறரது கூற்று. உதவி என்றமையால், அச் சொல்லைப் பிறர் சொல்லுமாறு மகன் சல்வி, அறிவு, ஒழுக்கங்களோடு கடத்தலாகிய உதலியைத் தந்தை வேண்டி நிற்கின்ற னென்பதும், அதனால் அவ் உதவியைத் தக்தைக்கு மகன் தவறாது செய்யக் கடன் பட்டுள்ளான் என்பதும் பெறப்பட்டன. என்னும் என்பது னகர வொற்றுக் கெட்டு நின்றது. கருத்து. கல்வி, அறிவு, ஒழுக்கம் உடையரா யிருத்தல் மக்கன் சடமை 40.

142

142