பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் - அறப்பால். அகலம். இன்புற்றார் என்றமையால், அவர் அறமும் பொரு ளும் முன்னசே பெற்றமை தெற்றென விளங்கும். வழக்கு என்பது ஆகுபெயர், அதன் பயனுக்கு ஆயினமையால். தருமர் பாடம் 6 ஆன் புற் றமைந்த '; ' ஆருயிர்க் கின்புற்றார்'. நச்சர் பாடம் "ஆளுயி சென்புற்ற செய்தும் பிறப்பு', கருத்து. அன்புடைமை சறம் பொருள் இன்பம் வீடு என்னும் கான்கையும் அளிக்கும். சு. அறத்திற்கே யன்புசார் பென்ப வறியார் மறத்திற்கு மஃதே துணை. 45. பொருள். அறியார் அன்பு அறத்திற்கே சார்பு எஎன்ப-(அன் பின் தன்மையை) அறியாதார் அன்பு அதத்தைச் செய்தற்கே துணை என்று சொல்லுவர்; அஃதே மறத்திற்கும் துணை - அன்பே மறந் தைச் செய்தற்கும் துணை. அகலம். ஓர் உயிர் அல்லது ஒரு பொருள் மீது கொண்டுள்ள அன்பே பிறி தோ ரூயிர்க்குத் தீங்கிழைத்தற்குக் காரண மாதலால், அன்பே மறத்திற்கும் துணை என்றார். தருமர் பாடம் 'சாஸ் பென்ப. கருத்து. மாந்தர் செயல்கட் கெல்லாம் அன்பே காரணம். 46. GT. என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை யறம். பொருள். என்பு இல் அதனை மெயில்போல அன்பு இல் அதனை அறம் நாயும் - எம்பு இல்லாத பிராணியை வெயில் (காய்தல்)போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் வருத்தும். அகலம். இவ்லதனை என்னும் இரண்டும் செய்யுள் விகாரத் தால் லகர வொற்றுக் கெட்டு கின்றன. ஏகாரம் அசை. 146

"

146