பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவள்ளுவர் திருக்குறள்
. சிறப்புப் பாயிரம்.

(திருவள்ளுவ மாலை)

அசரீரி,

திருத்தரு தெய்வத் திருவள் ளுவரோ
திருத்தரு நற்பலகை யொக்க - விருக்க
வுருத்திர சன்ம ரெனவுரைத்து வானி
லொருங்கவோ வென்தோர் சொல்.

இ-ள். திருத்தகு தெய்வத் திருவள்ளுவரோடு-அருட் செல்வத்தையும் அதற்குத் தக்க தெய்வத்தன்மையையு முடைய திருவள்ளுவரோடு, உருத்தகு நற் பலகை உருத்திரான்மர் ஒக்க இருக்க என உரைத்து-அவர் இருத்தற்குத் தனது உருவத்தினாலே தக்க நல்ல சங்கப் பலகையிடத்து உருத்திரசன்மர் ஒருவரே ஒப்ப ஏறியிருக்க வென்று கூறி, வானில் ஒருக்க ஓர் சொல் ஓ வென்றது--ஆகாசத்தி லிருந்து அவ்விடத்துள்ள புலவர் கருத்தை யெல்லாம் ஒற்றுமை செய்யும்படி ஒரு வாக்கியம் ஓவென்று இரைந் தெழுந்தது.

"அருட் செல்வஞ் செல்வத்துட் செல்வம்" என்ப வாகலின், திருவென்றதற்கு அப்பொருள் உணரக்கப்பட்டது, தெய்வத்தன்மை - தெய்வத்தின் அவதாரமாய் விளங்குகை, தெய்வத்தன்மை யில்லார்க்கு அருளுனதாயினும் அதனாலே பெரும் பயன் விளையாமையின், தகுதி சொல்லப்பட்டது. திருவள்ளுவ ரென்னும் பெயருள், திருவென்பது உயர்வையும், வள்ளுவரென்பது வன்மையையுடைய ரென்பதையும் விளக்கி நின்றன வாகலின், அது வேதத்தில் இலைமறை காய்கள் போற் பல விடங்களிலும் மறைந்து வெளிப்படா திருந்த மெய்ப்பொருள்களை யெல்லாம் தொகுத்து உலகத்தாருக்குக்

9

2-