பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பிறனில் விழையாமை.

அகலம். தெளிந்தார்-(தம்மை நல்லொழுக்க முடையவ ரென்று தமது நண்பராகவோ தொழிலாளராகவோ) தெளிந்து கொண்டவர்.

கருத்து. தெளிந்தாருடைய இல்லாளிடத்துத் தீமை புரிபவர் செத்தா ராவர். 113.

௪. எனைத்துணைய னாயினு மென்னுாந் தினைத்துணையுந்

   தேரான் பிறனில் புகில்.

பொருள். தினை துணையும் தேரான் பிறன் இல் புகில்-(ஒருவன்) சிறிது அளவும் ஆராயாதவனாய்ப் பிறனுடைய இல்லின் கண் நுழையின், எனை துணையன் ஆயினும் என் ஆம்- எவ்வளவு பெருமை யுடையவ னானாலும் யாது பயன் ஆம்? (ஒரு பயனும் இல்லை).

அகலம். தேரான்—(பிறன் இல்லின்கண் தீமை புரியச் செல்வதனால் தனக்கு உண்டாகும் கேடுகளை) ஆராயாதவனாய். மணக் குடவர் பாடம் • 'எனைத்துணையாயினும்': ' புகில்'. முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘எனைத்துணைய ராயினும்', ' புகல்'. 'எனைத் துணைய னாயினும், என்பது 'தேரான் ' என்பதற்கு ஒப்ப ஒருமையா யிருத்தலானும், புகில் என்பது பொருத்தமான பொருளைத் தருதலானும், அவையே ஆசிரியர் பாடங்கள் எனக் கொள்ளப்பட்டன.

கருத்து. பிறன் மனையாள்பாற் செல்பவன் தனது பெருமையை யெல்லாம் இழப்பன். 114. ரு. எளிதென லில்லிறப்பா னெய்துமெஞ் ஞான் றும்

   விளியாது நிற்கும் பழி.

பொருள்.' எளிது என இல் இறப்பான்-(பிறனது இல்லின் கண் செல்லுதல்) எளிது என்று கருதி (ப்பிதன்) இல்லினுள் செல்

181

181