பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருக்குறள் - அறப்பால். குக் காரணமாய அறிவுடைமையைக் கூறும் இக் குறளில் விரு தொராலுக்குக் காரணமாய அறிவின்மையையும் கூறினார். கருத்து. அறிவில்லாதார் செய்த பிழைகளைப் பொறுத்தல் வேண்டும். 123. ச. நிறையுடைமை நீங்காமை வேண்டிற் பொறையுடைமை போற்றி யொழுகப் படும். பொருள். கிறை உடைமை நீங்காமை வேண்டின்-சான் புடைமை (கன்னை விட்டு) நீங்காதிருத்தலே (ஒருவன்) விரும்பின், பொறை உடைமை போற்றி ஒழுக படும்-பொறையுடைமையைப் பேணி ஒழுக வேண்டும். கருத்து, பொறையுடையவனை விட்டு சிறையுடைமை நீங்காது. ரு. ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற்பொறித்து. பொருள். ஒறுத்தாரை ஒன்றாக வையார் (தமக்குத் தீங்கு செய்தானை) ஒறுத்தவரை ஒரு பொருளாக மதியார்; பொறுத்தாரை" பொன் போல் பொறித்து வைப்பர்- பொறுத்தவரைப் பொன்னை (த்துணியில் பொதிந்து வைத்தல்) போல (மனத்தின்கண்) போற்றி வைப்பர் (அறிவுடையார்). அகலம். ஒறுத்தவர் - தண்டித்தவர். 'அறிவுடையார்' என் பது அவாய்நிலையான் வர்தசி. கருத்து. பொறுத்தாரை அறிவுடையார் போற்றுவர். 125. சு. ஒறுத்தார்க் கொருநாளே யின்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ். . பொருள். ஒறுத்தார்க்கு ஒரு நாளே இன்பம் (ஆம்)—(தமச்

186

186