பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவள்ளுவர் திருக்குறள்

கொடுத் தருள்செய்தவ ரென்னுங் காரணம்பற்றி வந்த பெயராயிற்று. 'வள்' முதனிலை; 'அர்' இறுதிநிலை; 'உ' சாரியை. அம் முதனிலைக்குப் பொருள் ஈகை, 'உருத்திரசன்மர்' உருத்திரனால் அடைந்த சன்மத்தையுடைய ரென விரியும், அவர் முருகக் கடவுளது திருவவதாரமாய் வணிக மரபிற் றோன்றிய மூங்கைப் பிள்ளையார், அசரீரி - அருவமாய் எங்கும் நிறைந்துள்ள முதற் றெய்வம். அரங்கேற்றத் தொடங்கிய காலத்துத் தெய்வப் புலவரோடு ஒப்பயிருந்து கேட்டற்குத் தகுதியுடையோர் யாரென யாவரும் எண்ணமுற்று நின்றவழி இவ் வசரீரி வாக்கியம் பிறந்தது. என்ற தெனப் படர்க்கை வினையாகக் கூறலின், ஆண்டு நின்று கேட்ட புலவர்களுள் ஒருவர் அதனை இங்ஙனம் பாடலாகச் செய்தன ரென்றறிக. வ. உ. சி. பாடம் 'என உரைக்க.' (க)

நாமகள்.

நாடா முதனான் மறைநான் முகனாவிற்
பாடா விடைப்பா ரதம்பகர்ந்தேன்-கூடாரை
எள்ளிய வென்றி யிலங்கிலைவேன் மாறபின்
வள்ளுவன் வாயதென் வாக்கு.

இ-ள். கூடாரை எள்ளிய வென்றி இலங்கு இலை வேல் மாற - பகைவரைப் புறங்கொடுக்கச் செய்து இகழ்ந்த வெற்றியை உண்டாக்கி விளங்காநின்ற இலை போலும் வேற்படையை யுடைய பாண்டிய ராசனே, நாடா - உலகத்தார் விதி விலக்குக்களை அறிந்து உய்யும் வழியை நாடி , முதல் நான்முகன் நாவில் நான் மறை பாடா - படைப்புக் காலத்திலே பிரமனது நாவிலிருந்து இருக்கு முதலாகிய நான்கு வேதங்களையும் பாடி, இடைப் பாரதம் பகர்ந்தேன் - நடுவான காலத்திலே பாரதமாகிய வேதத்தைக் கூறினேன்; பின் என் வாக்கு வள்ளுவன் வாயது - அதற்குப் பிற்பட்ட இக் காலத்திலே என்

10