பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருக்குறள் - அறப்பால். அழுக்கச அடையார்க் கதுசாலு மொன்னார் வழுக்கியுங் கேடீன் பது. பொருள். ஒன்னார் வழுக்கியும் பகைவர் (கேடு செய்யத்) தவறியும், அழுக்காறு உடையார்க்கு கேடு ஈன்பது-பொறாமை யுடைய யவர்க்குக் கேடு பயப்பதற்கு, அதுவே சாலும் பொறாமையே போலும். அகலம். பிரிதிலே ஏகாரம் செய்யுள் விகாரத்தால் தொக்கது. கேஉன்பது கான்காம் வேற்றுமைத் தொகை. கருத்து. அழுக்காறு உடையானை அழித்தற்கு வேறு பகை வேண்டா; அதுவே போதும். சு. கொடுப்ப தழுக்கதுப்பான் சுற்ற முடுப்பதூஉ முண்பதூஉ மின்றிக் கெடும். பொருள். கொடுப்பது அழுக்கறுப்பான்-(ஒருவனுக்கு மத் றொருவன்) கொடுப்பதன்கண் பொறாமை செய்பவன், சுற்றம் உடுப் பதும் உண்பதும் இன்றி கெடும்- சுற்றத்தோடு உடுப்பதும் உண்பதும் இல்லாமல் கெடுவன். அகலம், கொடுப்பது அழுக்கறுப்பா னுடைய சுற்றம் உடுப்ப தும் உண்பதும் இன்றிக் கெடும் என உரைப்பாரும் உனர். அவ் வாறு உரைத்தல், ஒவ்வொருவனும் செய்த வினைகளின் பயன்கள் அவனவளையே சேரும் என்ற வடமொழி தென்மொழிநூல் வழக் கிற்கு முரண்படும். ஆதஞல் அவ்வுரை பொருந்தாது. உடுப்பது- உடுக்கும் துணி, உண்பது-உண்ணும் உணவு. சற்றம் என்பது மூன்றாம் வேற்றுமைத் தொகை. அளபெடை இரண்டும் இன்னி சைக்கண் வந்தன. கருத்து. கொடுப்பது அழுக்கறுப்பான் தன் ஆக்கத்திற்கு ஆதாரமான சுற்றத்தையும்,தன் உடையையும் உணவையும் இழப்பன். 102'

.

192