பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்புப் பாயிரம்.

ராயின், மற்றொரு மதத்தார் தமது நூலிலே அதனை மறுத்து அவை வேறா மென்று நாட்டுவர்; வேறு எனின் அன்று என்ப - அப்படி வேறென்று நாட்டின், பின்னொரு மதத்தார் அதனை அன்றென்று மறுப்பர்; ஆதலால், சமய நூல்களெல்லாம் இவ்வாறு மறுக்கப்படுகின்றன. வள்ளுவனார் முப்பால் மொழிந்த மொழி நன்று என எப்பாலவரும் இயைய - திருவள்ளுவராலே முப்பாலாகச் சொல்லப்பட்ட நூலை நன்றென்று கொள்ளுதற்கு எவ்வகைப்பட்ட பகுதியோரும் உடன் படுவார்.

'மொழி' ஆகு பெயர். ஆறு மதமா வன வியாச மதம், சைமினி மதம், பதஞ்சலி மதம், கபில மதம், கணாத மதம், அக்ஷபாத மதம் ; அன்றிச் சைவ வைணவ முதலியவற்றைக் கூறினு மாம். எச்சமயத்தாரு மென்னாது எப் பாலவரு மென்றதனால், வேதத்துக்கு உட்பட்ட சமயத்தாரே யன்றிப் புறப்பட்ட சைனம், பௌத்தம், முதலிய மதத்தாரும், பலவகைப்பட்ட சாதியாரும், தேசத்தாரும், காலத்தாரும், பிறரும் தழுவப்படுத லறிக, இதுவே பொது வேதமென்றபடி. (௯)

சீத்தலைச் சாத்தனார்.

மும்மலையு முந்நாடு முந்நதியு முப்பதியு
மும்முரசு முத்தமிழு முக்கொடியு-மும்மாவுந்
தாமுடைய மன்னர் தடமுடிமேற் றாரன்றோ
பாமுறைதேர் வள்ளுவர்முப் பால்.

இ-ள் . வள்ளுவர் பாமுறைதேர் முப்பால் - திருவள்ளுவரது பாக்களின் முன் பின் முறை தெரிதற் கிடனாகிய திருக்குறளானது, மும்மலையும் - கொல்லிமலை நேரிமலை பொதியமலை எனப்படுகின்ற மூன்று மலைகளையும், முந் நாடும் - குடநாடு புனனாடு தென்னாடு எனப் படுகின்ற மூன்று நாடுகளையும், முந் நதியும் - பொருநைநதி காவிரி

17

3