பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவள்ளுவர் திருக்குறள்

நாமத்திற் கண்டது. கேசிக்குப் பின்னே பிறந்தவள் உபகேசியென்றாயது, உபேந்திர னென்பது போல. மாதா அனுபங்கி மாதாவை நிகராகக் கொண்டு நடக்கின்ற ஒழுங்கின னெனப்படுதலின் அவள் பிள்ளை மேலே போல், இவர் உலகத்தார்மேல் அருள் செய்தல் சொல்லப்பட்ட தாயிற்று. நாப் போ தென்றதற் கேற்பப் புலமையிலே தேன் ஆரோபிக்கப்பட்டது. அச்சுப்போற் றாங்குதலால், அச் சென்றார். நாயனாராலே '"திங்கட் குடையுடைச் சீர்சால் வழுதியுஞ் , சங்கப் புலவருந் தழைத்தினி தோங்கிய" மதுரைக்கு உண்டான சிறப்புச் சொல்லியபடி. வ. உ. சி. பாடம்: - 'மாதானு பங்கி மருவு மாதானுபங்கி வள்ளுவர் மனைவியார். (௨௰௧)

தொடித்தலை விழுத்தண்டினார்.

அறநான் கறிபொரு ளேழொன்று காமத்
திறமூன் றெனப்பகுதி செய்து- பெறலரிய
நாலு மொழிந்தபெரு நாவலரே நன்குணர்வார்
போலு மொழிந்த பொருள்.

இ-ள். அறத் திறம் நான்கு - பாயிரம், இல்லறம், துறவறம், ஊழ் என அறப் பாலினுட் பிரிவுகள் நான்கும், அறி பொருட் டிறம் ஏழ்- அரசு, அமைச்சு, அரண், கூழ், படை, நட்பு, ஒழிபு என அறியப்பட்ட பொருட் பாலினுட் பிரிவுகள் ஏழும், காமத் திறம் மூன்று எனப் பகுதி செய்து - ஆண்பாற் கூற்று, பெண்பாற் கூற்று, அவ் விருபாற் கூற்று எனக் காமத்துப் பாலினுட் பிரிவுகண் மூன்றுமாகப் பகுதி செய்து, பெறலரிய நாலும் மொழிந்த பெரு நாவலரே- பெறுதற் கரிய அறம் பொருள் இன்பம் வீடு எனப் படுகிற நான்கு பொருளையும் சொல்லிய பெரு நாவலரே, ஒழிந்த பொருள் நன்கு உணர்வார் போலும்- அவற்று ளடங்காது ஒழிந்த பொருள் உளதாயின், அதனை நன்றாக அறிய வல்லவர் போலும்.

28