பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவள்ளுவர் திருக்குறள்

இ - ள். அரசியல் ஐ யைந்து - அரசியல் இருபத்தைந் ததிகார முடைத்து; அமைச்சியல் ஈரைந்து - அமைச்சியல் பத்ததிகாரமுடைத்து; அரண் இரண்டு - அரணியல் இரண்ட திகார முடைத்து; கூழ் ஒன்று - பொருளியல் ஓரதிகார முடைத்து; படை இருவியல் - படையியல் இரண்ட திகார முடைத்து; நட்புப் பதினேழ்-நட்பியல் பதினே ழதிகார முடைத்து; குடி பதின் மூன்று – ஒழிபியல் பதின் மூன்றதிகார முடைத்து, எண் பொருள் இவை ஏழாம் -எண்ணப்பட்ட பொருட் பாலுக்கு இவ் வியல்க ளேழாம்.

அரணுக்கு உருத்திட்பம் சிறத்தலின் உரு வல்லர ணென்றும், பொருளுடையார்க்கே ஒளி அமைவதாகலின் ஒண் பொருளென்றும், படைக்குக் கடும் போரிற் பின்கொடாத திண்மை உரித்தாகலின் திண்படை யென்றும் கூறினார். பிற் காலத்தார் அமைச்சு முதலிய ஐந்தனையும் அங்கவியல் என ஓரிய லாக்கியும் வழங்குப. பொருட் பா லிய லதிகாரத் தொகை சொல்லியபடி. (௨௰௬)

மோசி கீரனார்.

ஆண்பாலே ழாறிரண்டு பெண்பா லடுத்தன்பு
பூண்பா லிருபாலோ ராறாக-மாண்பாய
காமத்தின் பக்கமொரு மூன்றாகக் கட்டுரைத்தார்
நாமத்தின் வள்ளுவனார் நன்கு.

இ-ள். ஆண்பால் ஏழ்-ஆண்பாற் கூற்று ஏ ழதிகாரமும்,பெண்பால் ஆறிரண்டு--- பெண்பாற் சுற்றுப் பன்னிரண் டதிகாரமும், அடுத்து அன்பு பூண்பால் இருபால் ஓ ராறாக - ஒருவரை யொருவர் அடுத்து அன்பைப் பூணுதற் பகுதி யுடைய அவ்விருபாற் கூற்று ஆ றதிகாரமு மாக, மாண்பு ஆய காமத்தின் பக்கம் ஒரு மூன்றாக நாமத்தின் வள்ளுவனார் நன்கு கட்டுரைத்தார் - மாட்சியான

32