பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவள்ளுவர் திருக்குறள்


வாய்மொழி வள்ளுவர் முப்பான் மதிப்புலவோர்க்
காய்தொறு மூறு மறிவு.

இ-ள். மணற் கிளைக்க நீர் ஊறும் - மணலைத் தோண்டுந் தோறும் நீர் பெருகும்; மைந்தர்கள் வாய் வைத்து உணத் தாய் முலை ஒண் பால் சுரக்கும் - புதல்வர்கள் வாய் வைத்து உண்ணுந் தோறும் தாயினது முலைக்கண் நல்ல பால் பெருகும்; பிணக்கு இலா வாய் மொழி வள்ளுவர் முப்பால் ஆய் தொறும் மதிப் புலவோர்க்கு அறிவு ஊறும்- அவை போல, பிணங்குதற்கு எது வில்லாத வாய்மைச் சொல்லை யுடைய திருவள்ளுவரது திருக்குறளை ஆராயுந்தோறும் அறிவுடைய புலவர்க்கு அறிவு வளரும்.

கற்பித மாகிய சாதி சமயங்களின் மானம் பற்றி உள்ளதை இல்லதாகவும் இல்லதை உள்ளதாகவும், சிறிதைப் பெரிதாகவும் பெரிதைச் சிறிதாகவும், தீயதை நல்லதாகவும் நல்லதைத் தீயதாகவும் புனைந்து பிறர் பிணங்கும்படி சொல்லப்பட்ட தல்லாமையால், பிணக்கிலா வாய் மொழி என்றார். மதிப் புலவோர்க் கறி வூறு மெனவே, அவர் அவ் வறிவைக் கொண்டு பிறர்க் கெல்லாம் விதி விலக்குக்களைக் கற்பித்தல் வேண்டு மென்ற தாயிற்று. இதனைச் சிலகாற் பயிறலின் அமையாது பலகாலும் பயிற்சி செயல் வேண்டு மென்ற படி. (௩௰௧)

பெருஞ் சீத்தனார்.

ஏதமில் வள்ளுவ ரின்குறள்வெண் பாவினா
லோதிய வொண்பொரு ளெல்லா-முரைத்ததனாற்
றாதவிழ் தார்மாற தாமே தமைப்பயந்த
வேதமே மேதக் கன.

இ-ள். தாது அவிழ் தார் மாற-பொடியொடு விரிந்த பூ மாலையை யுடைய பாண்டிய ராசனே, ஏதம் இல் வள்ளுவர் இன்

36