பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்புப் பாயிரம்.

குறள் வெண்பாவினால் ஓதிய ஒண் பொரு ளெல்லாம் உரைத்ததனால் - குற்றம் இல்லாத திருவள்ளுவர் இனிய குறள் வெண்பாக்களாலே நான்கு வேதங்களாலுஞ் சொல்லப்பட்ட ஒள்ளிய பொருள்களை யெல்லாங் கூறினமையால், மே தக்கன தாமே தமைப் பயந்த வேதமே - மேம்பாட்டுக்குத் தக்கவை. அக் குறள் வெண்பாக்களோ , முத னூலாய் நின்று அவற்றைப் பயந்த வேதங்களோ? நீ சொல்வா யாக.

தாம் தம்மை எனப் பட்டவை அவை அவற்றை என்னும் பொருளைத் தந்து நின்றன. ஏகாரம் இரண்டும் வினா. பிற நூலாசிரியர்க் கெல்லாம் அவ ரெதிரிக ளாலே மறுக்கப்பட்டு வருங் குற்றம் போல்வது இவர்க்கு இல்லை யென்றற்கு ஏதமில் வள்ளுவ ரென்றும், தாங் குறியவாய் நின்று கற்போர்க்கு வருத்தம் விளையாமை பற்றி இன் குற ளென்றும், உணர்வுடையோராலே விரும்பப்பட்ட நற் குண முடைமை பற்றி ஒண் பொரு ளென்றும் கூறினார். நூலாசிரியர்க்கும், நூலுக்கும், நூனுதலிய பொருளுக்கும் தகுதி தோன்றச் சொல்லப்பட்ட விசேட குணங்களாலே. இவ் வேதம் அவ் வேதத்தினுஞ் சிறப் புடைமை குறிப்பித்தபடி. (௩௰௨.)

நரிவெருத் தலையார்.

இன்பம் பொருளறம் வீடென்னு மிந்நான்கு
முன்பறியச் சொன்ன முதுமொழிநூன் - மன்பதைகட்
குள்ள வரிகென் றவைவள் ளுவருலகங்
கொள்ள மொழிந்தார் குறள்.

இ-ள். இன்பம் பொருள் அறம் வீடு என்னும் இந் நான்கும் மன்பதை கட்கு முன்பு அறியச் சொன்ன முது மொழி நூல் உள்ள அரிது என்று - இன்ப முதலிய இந் நாற் பொரு ளியல்புகளையும் மக்கட் பரப்புக்கு அக் காலத்தில் அறியும் வண்ணஞ் சொல்லப்

37