பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்புப் பாயிரம்.

வேறான அதிகாரிகளுடைமை பற்றி, அரு மறைக ளைந்து மென்றார். சமய நூ லாறும் ஒன்றே பொரு ளென்னும் பாட்டுரையிற் காண்க. நமக் கெல்லாம் அறி வொழுக்கங் கொளுத்தி நல் வழிப் படுத்த வந்த பரமாசாரியர் இவரே யென்னு முரிமை தோன்றற்கு நம் வள்ளுவனா ரென்றார். மறைக ளைந்துஞ் சமய நூ லாறும் நம் வள்ளுவனார் புந்தி மொழிந்த பொரு ளெனலால், அவை பலவற்றினும் வேறு வேறு வகைப்பட்டுச் சிறந்துநின்ற கருத்துக்க ளெல்லாம் இவ் வொரு நூற்கண்ணே அடங்கி நிற்கின்றமை சொல்லப் பட்ட தாயிற்று. 'பொருள்' ஆகுபெயர். ஒருவ ரெனப் பொதுப் படக் கூறலால், இதனை ஓதுதற்குப் பெண்பாலாருக்கும் அதிகார முண்டென்பது கொள்ளப்பட்டது. இவ் வொரு நூ லோதி யுணர்ந் தோர் அருமறைக ளைந்துஞ் சமய நூ லாறும் ஓதி யுணர்ந்தோ ராவ ரென்ற படி. (௪௰௪)

நச்சுமனார்.

எழுத்தசை சீரடி சொற்பொருள் யாப்பு
வழுக்கில் வனப்பணி வண்ண- மிழுக்கின்றி
யென்றெவர் செய்தன வெல்லா மியம்பின
வின்றிவ ரின்குறள்வெண் பா.

இ-ள். எழுத்து அசை சீர் அடி சொல் பொருள் யாப்பு வழுக்கு இல் வனப்பு அணி வண்ணம் இழுக்கு இன்றி என்று எவர் செய்தன-எழுத்துமுதல் வண்ண மீறாகச் சொல்லப்பட்ட இவற்றுள் வழுவுத வில்லாமல் எக் காலத்தில் எவரால் அவை செய்யப் பட்டன, எல்லாம் இன்று இவர் இன் குறள் வெண்பா இயம்பின-அவை யெல்லாம் இக் காலத்து இத் திருவள்ளுவராலே செய்யப் பட்ட இவ் வினிய குறள் வெண்பாக்களிற் சொல்லப்பட்டன.

வனப்பு - அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு,

47