பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்புப் பாயிரம்.

ஒப்புமை சொல்லுதற்கு நூல்களில் ஒன்றும் இன்மையால், ஏனைப் பொருள் பலவற்றினுஞ் சிறந்த மதியை யாயினும் சொல்லுதுமெனப் புகின் அதுவும் இதனாற் றகுவ தன் றென்ற படி. (௪௰௬)

நப்பாலத்தனார்.

அறந்தகளி யான்ற பொருடிரி பின்பு
சிறந்தநெய் செஞ்சொற்றீத் தண்டு - குறும்பாவா
வள்ளுவனா ரேற்றினார் வையத்து வாழ்வார்க
ளுள்ளிரு ணீக்கும் விளக்கு.

இ-ள். அறம் தகளி - தருமம் அகலும், பொருள் திரி-பொருள் திரியும், இன்பு நெய்-காமம் நெய்யும், செஞ் சொல் தீ-செவ்விய சொல் நெருப்பும், குறும் பாத் தண்டா - குறட் பாத் தண்டும் ஆக, வள்ளுவனார் வையத்து வாழ்வார்கள் உள் ளிருள் நீக்கும் விளக்கு ஏற்றினார் - திருவள்ளுவ நாயனார் பூமியின்கண் வாழ்வோரது அகத் திருளை ஒழிப்பதாகிய விளக்கு ஏற்றினார்.

ஆன்றல் - மேம்படுதல். அகத் திருள் - அஞ்ஞானம். தீச் சுடர், தகளி, முதலியவற்றோடு கூடிப் புறத் திருளை எப்படியோ, அப்படி நாயனாரது திருவாயிற் பிறந்த செஞ்சொல், அறம், முதலியவற்றோடு கூடி அகத் திருளைக் கெடுத்தலின், இங்ஙனம் உருவகஞ் செய லாயிற்று. மனையகத் தேற்றப்படுகிற விளக்கு அம் மனையகத் துள்ளார்க்கு மாத்திரமே உபயோகியாய் நிற்றலாலும், அகத் திருளைக் கெடுக்க வல்ல தன்மையாலும், இஃது உலகத்து வாழ்வோர் பலர்க்கும் உபயோகியாய் நிற்றலாலும், அகத்திருள் கெடுத்தலாலும், அதனின் இது பல கோடிமடங்கு மிக்குச் சிறந்து நிற்கின்றமை உணர்த்திய படி. (௪௰௭)

குலபதி நாயனார்.

உள்ளக் கமல மலர்த்தி யுளத்துள்ள
தள்ளற் கரியவிரு டள்ளுதலால் - வள்ளுவனார்


49

7