பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறப்புப் பாயிரம்

பட்டவை யெல்லாம் பொய்யேயாய்ப் போயின; பொய் யல்லாத மெய்ப் பால மெய்யாய் விளங்கின—பொய்மை யல்லாத மெய்யின் பகுதியிற் பட்டவை யெல்லாம் மெய்யேயாய் விளங்கின.

குறளாற் பொய்ப் பால பொய்யேயாய்ப் போயின மெய்ப் பால மெய்யேயாய் விளங்கின. எனவே, இதற்கு முன்னெல்லாம் உண்மை துணியப் படாமையின் பொய்ப் பால மெய்ப் பால போன் மேற் கொள்ளப் பட்டும், மெய்ப் பால பொய்ப் பால போற் கைவிடப் பட்டும் மயங்கிக் கிடந்தன வென்ற தாயிற்று, இதன் மெய்யுணர்வு பயத்தற் சிறப்புச் சொல்லிய படி. (௪௰௯)

கொடிஞாழன் பாணி பூதனார்.

அறனறிந்தே மான்ற பொருளறிந்தே மின்பின்
றிறனறிந்தேம் வீடு தெளிந்தே—மறனெறிந்த
வாளார் நெடுமாற வள்ளுவனார் தம்வாயாற்
கேளா தனவெல்லாங் கேட்டு.

இ-ள். மறன் எறிந்த வாள் ஆர் நெடு மாற—பகைவரை யெறிந்த வாட்படை தங்கிய வீறோங்கும் பாண்டிய ராசனே, வள்ளுவனார் தம் வாயாற் கேளாதன வெல்லாம் கேட்டு அறன் திறன் அறிந்தோம்—திருவள்ளுவ நாயனாரது வாக்கால் இதற்கு முன் கேட்கப்பட் டில்லாதவை யெல்லாம் இப்போது கேட்டு அறத்தின் றிறத்தை யறிந்தேம்; பொருட் டிறன் அறிந்தேம்-பொருளின் றிறத்தை அறிந்தேம்; இன்பின் திறன் அறிந்தேம்—இன்பத்தின் றிறத்தை அறிந்தேம்; வீட்டுத் திறன் தெளிந்தேம்—வீட்டின் றிறத்தை அறிந்தேம்.

திறன் அறம் முதலியவற்றோடுங் கூட்டப்பட்டது, 'மறன்’ ஆகு பெயர். கேளாதன—பிற நூலாசிரியர்க் கெல்லாம் அறிந்து சொல்லு

51