பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/66

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

56

திருவள்ளுவர் திருக்குறள்.

மையும் பொருள் விரிவின் அளவு படாமையும் சொல்லிய படி, இது வ. உ. சி. உரை.

மகா வித்வான் மீனாச்சிசுந்தரம் பிள்ளை.

(அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்)

பொன்பூத்த மகரந்தப் புதுமதுவச் செழுங்கமலப் பொகுட்டு வாழ்வோன், தென்பூத்த நான்முகக்தோ னலனாலை முகத்தோனே தெளிமி னென்னக், கொன்பூத்த தமிழ் வழங்கு நிலத்தினற மினிதெழுந்து குதிகொண்டாட, மின் பூத்த செங்கதிரின் வள்ளுவரென் றொருநாம மேவத்தோன்றி;

பொருள். பொன் பூத்த மகரந்த புது மதுவ செழு கமல பொகுட்டு வாழ்வோன்—பொன்னிறம் பொருந்திய மகரந்தப் பொடியும் புதிய தேனும் கொண்ட செழுமையான தாமரையின் கொட்டையினிடத்து வாழ்வோனாகிய, தென் பூத்த நால் முகத்தோன்—அழகு பொருந்திய நான்கு முகத்தை யுடைய பிரம தேவன், நலன் ஐ முகத்தோன் தெளிமின் என்ன—நன்மை வாய்ந்த ஐந்து முகத்தோனாகிய சிவபிரான் தெனிப்பீர் என்று சொல்ல, கொன் பூத்த தமிழ் வழங்கும் நிலத்தின் அறம் இனிது எழுந்து குதி கொண்டாட—பெருமை பொருந்திய தமிழ் மொழி வழங்கும் நிலத்தின் கண் அறமானது இனிது எழுந்து பொலிந்து விளங்க, மின் பூத்த செங் கதிரின்—ஒளி பொருந்திய சூரியனைப்போல், வள்ளுவர் என்று ஒரு நாமம் மேவ தோன்றி—வள்ளுவர் என்று ஒரு பெயர் பொருந்தப் பிறந்து;

விரிவு. மதுவம்—தேன், இச் செய்யும் குளகம், குளகம்—முற்றுப் பெறாத செய்யுள்.

கருத்து. பிரம தேவரைப் பார்த்துச் சிவன் அறத்தைச் தெளிமின் என அவர் வள்ளுவராகப் பிறந்தார். (௫௰௬)

56)

56