பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/67

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சிறப்புப் பாயிரம்.

. பொலிதரமுன் ணுணர்நதமறை யகத்தமைந்த வறமுதனாற்

பொருளு மேன்மேல், ஒலிதரமற் றந்நான்கு மொருமூன்றி னடக்கியின்றே னொழுக்கி யாங்கு, மெலிதரலில் வரை முதற்பே ருருவொருசிற் றாடியகம் விளங்கன் மான, நலிதரறீர் சிலசொல்லிற் பலபொருளுஞ் செறித்துநவை நண்ணா தாக;

பொருள். பொலிதர முன் உணர்ந்த மறை அகத்து அமைந்த அறம் முதல் நால் பொருளும்—விளக்கமாக முன் அறிந்த வேதத்தி னுள்ளே நிரம்பிக் கிடந்த அறம் முதலிய நான்கு பொருள்களும், மேல் மேல் ஒலிதர—மேலும் மேலும் ஒலித்து விளங்க, அ நான்கும் ஒரு மூன்றின் அடக்கி இன் தேன் ஒழுக்கி ஆங்கு—அச் நான்கு பொருள்களையும் ஒப்பற்ற (அறம், பொருள், இன்பம் என்ற) மூன்று பொருள்களுள் அடக்கி இனிய தேனை ஒழுக்கினாற்போல, மெலிதரல் இல் வரை முதல் பெரு உரு ஒரு சிறு ஆடியகம் விளங்கல் மான—மெலிதல் இல்லாத மலை முதலிய பெரிய உருக்கள் ஒரு சிறிய கண்ணாடியினுள்ளே விளங்குதலைப் போல, நலிதரல் தீர் சில சொல்லில் பல பொருளும் செறித்து—அழிதல் இல்லாத சில சொற்களில் பல பொருள்களையும் நிறைத்து, நவை நண்ணாது ஆக— குற்றம் பொருந்தாமல் இருக்க;

அகலம். அறம் முதலிய நான்கு பொருள்கள்—அறம், பொருள், இன்பம், வீடு. மற்று என்பது அசை. பெரு+உரு=பேருரு- சிறு+ ஆடி=சிற் றாடி முடி, இச் செய்யுளும் குளகம்.

கருத்து. அவ் வள்ளுவர் அறம் முதலிய நான்கையும் அறம் முதலிய மூன்றில் அடக்கிக் கூறினார். (௨)

மொழிசுருங்கல். பொருள்விளங்கன் மொழியலினி தாத னல மொழிபு ணர்த்தல், வழியமையோ சையிற்பொலித

57