பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/74

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

64

திருவள்ளுவர் திருக்குறள்


உணர்வு உடையார்பால் பெரு கருணை மடை திறந்தால் ஒத்த , கண்ணான்-ஆராயும் அறிவுடையாரிடத்துப் பெரிய கருணை மடை திறந்தா லன்ன கண்களை யுடையவன், வாரும் இள நகை அரும்ப இனியர் முகம் மலர்ந்து மொழி மதுர வாயான்—(பார்த்தோர் கண்களைக்) கவரும் இளம் பற்கள் விளங்க இனியவர்பால் முகஞ் சிரித்துச் சொற்பகரும் மதுரமான வாயை யுடையவன்; மேரு என புடை பரந்து பகைவர் நிலை கலங்க எழுஉ வீங்கும் தோளான்—மேரு மலை யென்று சொல்லும்படியாகப் பக்கங்களில் விரிந்து பகைவருடைய நிலை கலங்கும்படியாக எழுந்து பருக்கும் தோள்களை யுடையவன்.

அகலம். ‘பார்’, ‘விசும்பு’ ஆகு பெயர்கள், அவை முறையே அவற்றில் வாழ்வோருக்கு ஆயினமையால், ‘எழூஉ’ செய்யூ என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையெச்சம். இதுவும் குளகம்.

கருத்து. அக் கோமான் அழகிய உடம்பும், பெருங் கருணையும், இனிய சொல்லும், சிறந்த வீரமும் உடையவன். (௯)

சிவஞானத் தேவர்வர பிரசாத பாலனருள் செறிபூ பாலன், பவஞான முழுதொழியக் கோபால னெஞ்ஞான்றும் பணிகா பாலன், தவஞான நீற்றொளியே யொளிர்பாலன் பகைகாணத் தகாப்பின் பாலன், அவஞான மறுத்துணர்ந்த முப்பாலன் போர்வையென வமைசீர்ப் பாலன்;

பொருள். சிவஞானத் தேவர் வர பிரசாத பாலன்—சிவ ஞானத் தேவருடைய வரப் பிரசாதமாய் வந்தவதரித்த பாலன், அருள் செறி பூ பாலன்—கருணை நிறைந்த காவலன், பவ ஞான முழுவதும் ஒழிய கோபாலன் எ ஞான்றும் பணி காபாலன்—பிறவி ஞானம் முழுவதும் ஒழிவதற்காகக் கோபாலன் என்றும் இறைஞ்சுகின்ற கபாலத்தானது, தவ ஞான நீற்று ஒளியே ஒளிர் பாலன்-தவ

64

64