பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/75

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சிறப்புப் பாயிரம்.

ஞானத்தை நல்கும் திரு நீற் ரொளியே' ஒளிர்கின்ற, நெற்றியை யுடையவன், பகை காண தகா பின் பாலன்—பகைவர்கள் காணத் தகாத முதுகினை யுடைய வீரன், அவஞானம் அறுத்து உண்ர்ந்த மு பாலன்—அவ ஞானத்தை ஒழித்து அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால்களையும் உணர்ந்த அறிவினன், போர்வை என்ன அமை சீர் பாலன்—போர்வை என்று சொல்லும்படியாகப் புகழினைக் கொண்டவன்;

அகலம். முழுதும் என்பதன் முற்றும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. செறி, பணி, ஒளிர், அமை, என்பன வினைத்தொகைகள். தகாத என்பது ஈறு கெட்டு நின்றது, அவஞானம்—பயனற்ற ஞானம்.

கருத்து. அக் கோமானாகிய சிவஞானத் தேவர் தவப் பயனால் பிறந்தவன் பின் சொல்லப் படுவோன். (௰)

ஒருகாவித் துவசத்தா தாணொளிர் தளவ மாலிகையா லுணர்வான் மீக்கூர்க், தருகாவித் துவசத்தா னான்றபெருஞ் சிவஞான மடங்க வுய்க்குங், கருகாவித் துவசத்தான் பகைநோக்கி யுறாமனமே கடைகா துஞ்சா, துருகாவித் துவசத்தான் புணர் யான்செய் காயமென வுரைக்கும் வாளான்;

பொருள். ஒரு காவி துவசத்தான்—ஒப்பற்ற காவிக் கொடியை யுடையவன், ஒளிர் தளவ மாலிகை யான்—விளங்குகின்ற முல்லை மாலையை உடையவன், உணர்வால் மீக் கூர்ந்து—அறிவினால் மிக்கு, அருகா—என்றும் குறையாத, வித்துவ சத்தான்—புலமையாகிய உண்மையை உடையான், ஆன்ற பெரு சிவஞானம் அடங்க உய்க்கும் கருகா வித்து வசத்தான்—நிறைந்த பெருமையை உடைய சிவஞானம் முழுவதையும் தோன்றச் செய்யும் கருகாத வித்தினைத் தன்

65