பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/77

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சிறப்புப் பாயிரம்.

________________

சிறப்புப் பாயிரம்.

ந்து மேற் செல்கின்ற யானையை உடையவன்; கருதார்மேல் பாய் கந்துகத்தான்—பகைவர்கள் மேற் பாயும் குதிரையை யுடையவன்; அம்பு அரவு சூடி அடியான்—கங்கா ஜலத்தையும் பாம்பையும் திருமுடியி லணிந்த சிவபிரானுக்கு அடியான்; வாயிற் கட்டித் தூங்கும் கந்துகத்தான்—கோட்டை வாயிலில் பகைவரைக் குறித்துக் கட்டி நால விடப்பட்டிருக்கும் பந்தையுடையான்; பரவும் நம் மாதா என்று உயிர் கருதி—புகழப்படும் நம் தாயனையா னென்று உயிர்க்கூட்டம் எண்ணி, கரிசு எலாம் இகந்து உக—குற்ற மெல்லாம் நீங்கிக் கெடும் பொருட்டு, தாம் நம்ப—அவ் வுயிர்ச்கூட்டம் தன்னை விரும்பவும், ரவுரவ மாதி நீங்க—(அவ் வுயிர்க்கூட்டம் தன்னைச் சேர்ந்து நன் நெறியில் நடப்பதனால்) ரவுரவ முதலிய நரக விளைவு அகலவும், வரம் கைக் கொண்டுள்ளான்—உயர்வைப் பெற்றுள்ளான்;

அகலம். வாயிற் கட்டித் தூக்கும் கந்துகம்: “வரிப்புனை பந்தொடு பாவை தூங்க” என்னும் திருமுருகாற்றுப் படை அடியையும் அதன் உரையையும் அடிக்குறிப்புக்களையும் பார்க்க. + ‘தாநம்ப’ என்றது யமகம் நோக்கித் ‘தானம்ப’ என வந்தது. இதவும் குளகம்.

கருத்து. மதம் பொழியும் யானையும், பகைவர்மேற் பாயும் குதிரையும், சிவ பத்தியும், கோட்டை வாயிலிற் கட்டிய பந்தும், சீவ காருண்ணியமும், நல்லொழுக்கமும், பெரும் புகழும் உடையவன்.

தரைசெய்தவப் பயனாகி யமைந்தபெரு வளப்புதுவைத் தலைமை யோன்பொன், வரைசெய்நிதிப் பெருவாழ்க்கை மா கனவான் பெரும்புலவர் மறவா தென்று, முரைசெய்பெரும் புகழ்ப்பொன்னுச் சாமிநரேந் திரன்மகிழ்கூர்ந் துரைப்பக் கேட்டு, நரைசெய்விடை யே றுயர்த்த நம்பிரா னடிக்கன்பே நயக்கு நல்லோன்;

'67 . |

67