பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/79

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சிறப்புப் பாயிரம்.

குணத்தினனாய்ச் சைவமெனும் பயிர்வளர்க்கு மெழிலி போல்வான்.

பொருள். மன்னு பெரு தமிழ் பாடை இலக்கணமும் இலக்கியமும் வரம்பு கண்டோன்—(என்றும்)நிலை பெற்று நிற்கும் பெரிய தமிழ் மொழியின் இலக்கணங்களையும் இலக்கியங்களையும் முற்றுறக் கற்றோன், பன்னு சிவ புராணங்கள் பல தெரிந்தோன்—(வீட்டு நெறியைச்) சொல்லும் சைவப் புராணங்கள் பலவற்றை அறிந்தோன், சிவ ஆகம நூல் பரவை மூழ்கி உன்னும் அனுபூதி என்னும் விலை வரம்பு இல்லா மணி கை உற கொண்டுள்ளான்—சிவஞான நூல்களாகிய கடலில் மூழ்கி அனுபவ அறிவு என்னும் விலை மதிப்பு இல்லாத மணியைக் கையில் பொருந்தக் கொண்டுள்ளவன், இன்னு நய குணத்தினனாய் சைவம் என்னும் பயிர் வளர்க்கும் எழிலி போல்வான்—இனிக்கும் நல்ல குணங்களை உடையவனாகிச் சைவம் என்னும் பயிரை வளர்க்கும் மழை போல்பவன்;

அகலம். இலக்கணம்—தொல்காப்பியம் முதலாயின. இலக்கியம்—மேற் கணக்கு, கீழ்க் கணக்கு நூல்கள் முதலாயின. சிவ புராணம்—இலிங்கம், காந்தம், கூர்மம், சைவம், பிரமாண்டம், பௌடிகம், மச்சியம், மார்க்கண்டேயம், வராகம், வாமனம், சிவாகமம்—காமிகம் முதலிய இருபத்தெட்டு. அவற்றின் பெயர்களை அகராதியிற் கண்டு கொள்க. ‘மன்னு’, ‘இன்னு’ வினைத்தொகைகள், + ‘எழிலி’ ஆகு பெயர்.

கருத்து. தமிழ் இலக்கண இலக்கியங்களும், சிவ புராணங்களும் ஆகமங்களும் கற்றுச் சிவப் பொருளுணர்ந்த அனுபூதிமான், நல்ல குணங்களை உடையவன், சைவம் வளர்க்குஞ் சீலன். (௰௪)

நீடுபுகழ்க் திருக்கேதீச் சுரந்திருக்கோ ணாசலமிந் நிலவா நின்ற நாடுபுகழ்த் தலம்பொலியாழ்ப் பாணத்து நல்லூர்வாழ் நகராக்

69