பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/80

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

70

திருவள்ளுவர் திருக்குறள்.

கொண்டோன், றேடுபுக ழுருவமைந்த கந்தவே டவத்துதித்த செல்வன் யாரும், பாடுபுக ழாறுமுக நாவலனவ் வாறச்சிற் பதிப்பித் தானே.

பொருள். நீடு புகழ் திருக்கேதீச்சரம் திருக்கோணாசலம் இ நிலவா நின்ற நாடு புகழ் தலம் பொலி யாழ்ப்பாணத்து நல்லூர் வாழ் நகரா(க) கொண்டோன்—நீடிய புசழைக் கொண்ட திருக்கேதீச்சரம் திருக்கோணாசலம் இவ் விளங்குகின்ற ஈழ நாட்டில் புகழ் பெற்ற நகரமாகிய அழகு பொருந்திய யாழ்ப்பாணத்து நல்லூரை (தான்) வாழும் நகராகக் கொண்டோன், தேடு புகழ் உருவு அமைந்த கந்தவேள் தவத்து உதித்த செல்வன்—(யாரும்) தேடும் புகழும் அழகும் நிறைந்த கந்தவேள் என்னும் பெயரை யுடைய யவரது தவத்தினால் தோன்றிய அழகன், யாரும் பாடு புகழ் ஆறுமுக நாவலன் அவ்வாறு அச்சில் பதிப்பித்தான்—எப் புலவனும் பாடும் புகழை யுடைய ஆறுமுக நாவலன் அவ்வாறு அச்சில் பதிப்பித்தான்.

அகலம். திருக்கேதீச்சரம், திருக்கோணாசலம் இவை யிரண்டும் பாடல் பெற்ற சிவ ஸ்தலங்கள், ஈழ நாடு இலங்கைத் தீவிலுள்ளது. யாழ்ப்பாணத்து நல்லூர், அவ் வீழ நாட்டில் ஒரு நகரம். அந் நகரத்தில் வாழ்வோர் பெரும் பண்டிதர்களும் புலவர்களுமே, நீடு, தேடு, பாடு என்பன வினைத்தொகைகள்.

கருத்து. யாழ்ப்பாணத்து நல்லூர் கந்தவேள் குமாரர் ஆறுமுக நாவலர் திருவள்ளுவர் திருக்குறளைப் பரிமேலழகர் உரையுடன் அச்சிற் பதிப்பித்தார். (௰௫)

தியாகராஜச் செட்டியார்.

(நேரிசை யாசிரியப்பா)

திருவளர் தெய்வச் செழுமறை யவர்த, முருவளர் செங்கை யுதக மவாவிக், கருங்கடன் முகட்டிற் செங்கேழ் பரப்பி,

70

70