பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/87

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சிறப்புப் பாயிரம்.

முன் தரித்திரர் போல என் செய்வோம் என்று தாழ்ந்து நிற்கவும், எழுத்து... ஆகவும்- எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி இவற்றின் இலக்கணங்க ளெல்லாம் முதிர்ந்து இன்பத்தோடு உறங்குகின்ற அரங்காகவும், இன்றி...திகழவும்— இல்லாமல் அமையாத இனிய உலங்கள் பலவும் நெருங்கினவாய்க் கிடந்து புகழ் பெற்று விளங்கவும், திருவுள... வேதம்—அழகிய மனத்தின்கண் நினைந்து அழகிய வாய் திறந்து ஒப்பற்றதாகச் சொல்லிய, சொல்லுதற்கு அரிய தெய்வத் தன்மை வாய்ந்த திருக்குறள் என்னும் செந்தமிழ்வேதம், பலருரை...எனினும் பலர் உரை செய்ய நிலவிய தென்றாலும், ஒருவா்...உரையொடு-குறையாத புலமையை யுடைய தருமர் முதலாய பாடல் சான்ற சிறப்பை யுடைய பதின்மர் செய்த விரும்பத் தகும் உரைகளுள் பெருமை நிறைந்து விளங்கும் பரிமே லழகர் இயற்றிய உரையுடன், விாிகடல்... தருகென-அகன்ற கடல் சூழ்ந்த பூமியில் நிலவி, விளங்கும்படியாக இன்புறும் அச்சில் பதித்துத் தருவா யென, கற்பக... பொழிற்கண்- கற்பக விருக்ஷச் சோலை ஆகாயத்தில் உள்ள தெனச் சிறப்புப் பொருந்திய புலவர் சொல்லுவா்; அது நம்போல் மாறாத நல்ல வளத்தை உடைய தென்றால் (நாம்) அங்குச் சென்று நன்றாகக் காணலாம்' என்று நினைந்து சென்றாற் போல, அழகு பொருந்த வளர்ந்து ஆகாயத்தைத் தொடும்படியாக உயர்ந்த அகன்ற மாமரச் சோலையின்கண், சிவந்தழை... விரும்பி -சிவர் தழைக்கின்ற தவத்தினர்க்கு இடமாய் அழகு ஒளிர்கின்ற காரைக்கால் நகரில் அவதரித்த காரைக்காலம்மையார் மனம் களிந்து (தமது இல்லத்தில் விருத்துண்ட) சிவனடியார்க்கு அளித்த மாங்கனிக்கு ஈடாக முக் கண்ணராகிய சிவபெருமான் தந்த, இனித்த மதுரமான மாங்கனி இச் சோலையின் கனியே யென்று சொல்லும்படியாக (ஒவ்வொரு மரத்தின்) ஒவ்வொரு கொம்பிலும் நெருங்கிப் பழுத்த எண்ணில்லாத பழங்களை உண்ண விரும்பி, வாவிப்

77