பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79

சிறப்புப்பாயிரம். செல்லாம் அணுகாது சேன் நீங்கச் சிவச் சின்னங்க செல்லாவற்றையும் அணிந்தஅந்த சிவ ஞானத் தேவர், பலமெலாம்... உதித்தோன்-முந்திய பிறப்புக்களிலெல்லாம் மகிழ்ந்து செய்த மிகப் பெரிய தவத்தின் பயன்க

ளெல்லாம் திரண்டு ஒரு மகனாக யுதித்தோன், பூவிலும் ...புகழான் - பூமியிலும் (கண்) திசைகளிலும். மற்றைய தீவுகளிலும் சூரிய சந்திரர் சுற்றும் பெரிய ஆகாயத்திலும், இனிய , சுவையை நல்கும் தமிழ்ப்புலவர் நாவிலும் பாவிலும் நடிக்கும் புகழை புடையவன், உண்மையும்... செல்வன் - வாய்மையும், உயர்ந்த நூல்களைஅறியும் நுண்ணிய அறிவும், வறுமையை ஒழிக்கும் கொடை யும், (குடிகள்) காண்டற்கு எளிமையும், பகைவரை வெல்லும் வலிமையும், சூரியன் விரும்பும் ஒளியும், சந்திரன் விரும்பும் தன்மையும், கண்ணோட்டமும் வளரப் பெற்ற சிறப்புடையவன், 'வண்டினம்,.. வென்றேன்- வண்டுக் கூட்டங்கள் கூடி இன்பமுடன் ஏறித் தோண்டப் பெரிய அரும்புகள் மலர்ந்து இனிய தேன் நிறைத்து பெருக உண்டு களிக்கும் குளிர்ந்த மலர் மாலையைச் சூடும் திண்ணிய தோள்களின் வலிமையால், அழகு நிறைந்து விளங்கும் மேகத்தை முடியாக அணிந்து புகழ்பெற உயர்ந்து, நேராகக் கீழே போய், நீர் நிறைந்து அமைந்த பெரிய கடல்கள் சூழ்ந்த பூமியின் மத்தியில் நின்ற மேரு மலையை வென்றேன், சற்றுப் திரை புனல்...புலமை யான் - எறியும் அலைகளை யுடைய கடல்கள் சூழ்ந்த பூவுலகைப் பொருந்திய எல்லா நூல்களையும் முடிவுற ஆராய்ந்து, பல நூல்களையும் கற்ற கவிவாணர்கள் சொல்லிய பாக்களை இஃது இத் தன்மையது, இஃது இத் தன்மையது என்று அறியும் புலமையை யுடையவன், மலர் பொதுள்... வென்றேன்- மலர்கள் நெருங்கிய சோலையை சுற்றுற உடுத்தி, உலகமெல்லாம் புகழும்படியாக நிற்கின்ற தென் மதுரையின்கண், விளங்கும் பொற்றாமரை மலர்கள் நிறைந்த தடாகத்தில் அமைந்திருந்த, சலங்கள் நிறைந்த சங்கப் பலகையை வென்

79