பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னுரை.


ஒட்டும்வகை யுணராராய்ப் பரம்பரை யொன்றே கருதி யொழிந்தா ரந்தோ" என்று கூறியிருத்தல் காண்க.

இந்நூலையாவது அச்சுப் பிழை இல்லாமல் அச்சிடுவிக்க வேண்டுமென்று யான் மிக்கவாக் கொண்டிருந்தேன். அதற்காக அதன் புரூவ்களை என்னுடன் பார்க்க வேண்டுமென்று என் நண்பர்களான மதுர ஆசிரியர் திரு.க.ரா. இராதாகிருஷ்ணய ரவர்களையும், பிரசங்க ரத்தினம், திரு.மு. பொன்னம்பலம் பிள்ளை யவர்களையும் வேண்டிக் கொண்டேன். ஒவ்வொரு புரூவும் என்னால் மூன்று முறையும், அவர்களால் இரண்டு முறையும் படிக்கப்பட்டது. அவ்வாறு படிக்கப்பட்டும், அச்சுப் பிழைகள் “மற்றொன்று சூழினும் தான்முந்துறும்” என்றபடி எங்கள் மூவர்களுக்கும் தெரியாமல் நூலுள்ளே நுழைந்து, “பிழை திருத்தம்” என்னும் ஒரு பக்கத்தைக் கவர்ந்து விட்டன. இராதாகிருஷ்ண அய்யரவர்கள் என்னுடன் புரூவ் பார்த்ததோடு எனது உரையை ஆங்காங்குச் சரிபார்த்தும் தந்தார்கள். பொன்னம்பலம் பிள்ளை யவர்கள் புரூவ் பார்த்ததோடு, அய்யரவர்களும் யானும் எனது உரையில் சிற்சில இடங்களில் பொருத்தமான சொற்களைப் பெய்தற்காக ஆலோசனை செய்துகொண்டிருந்த போது பொருத்தமான சில சொற்களைச் சொல்லியும் உதவினார்கள். அவ்வுதவிகளுக்காக அவ்விருவர்க்கும் எனது மனமார்ந்த வந்தனங்களை அளிக்கிறேன்.

இந்நூலை அச்சிட்டுக் கட்டுதற்கு எனக்குப்பொருள் அளித்தவர்கள் இந் நகரின் கண் பல சீர்களும், சிறப்புக்-

vii