பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86


திருவள்ளுவர் திருக்குறள். உயர்ந்த காமதேனு என்று சொல்லும்படியாக, முழுவதும் ஆராய்ந்து' கற்றவர்கள் கூடி, ஆயிரக்கோடி ஆண்டு சொல்லினும் சிறிதும் குறையாத, பெரிய வளங்கள் நிறைந்துள்ள இப் பூமியில் பரந்த பல நாடுகளில் உயர்த்த செம்பி நாடு என்னும் நல்ல நாட்டை யுடைய யவன், சந்தாமணிகளுள்... புதுவை மா நகரான்-கெடாத மணிகளுள் சிந்தாமணியைப் போன்ற பொன்னால் இயற்றப்பட்ட மதில்களை அழகுற உடுத்து நசர்கள் பலவற்றுள்ளும் பொருந்திய சீர்களைப் பெற்று, பழமையான புகழைத் தாங்கி உயர்ந்த புதுவை என்னும் தலைநகரை யுடையவன், சலஞ்சல... உதித்தோன்- வலம்புரிச் சங்கில் தோன்றிய சலங்கள் அமைந்த முத்து என்று சொல்லும்படியாக, தவத்தினர்கள் புகழும் சிவஞானத் தேவர் (செய்து) விளங்குகின்ற பெறார் தவத்தினால் சிறப்புற வந்து பிறந்தவன், பெருநிதி... வள்ளல் - பெரிய வீதிகலெல்லாம் உயர்ந்த (சங்கநிதி பதுமநிதி என்னும்) இரண்டு நிதிகளைப்போல இரந்தவர்களுக் கெல்லாம் அளவுபடுத்தாது கொடுக்கும் வள்ளல் கூட்டங்களுள் உயர்ந்த வள்ளல், பன்ன ப.மிசில் - சொல்லக் கேட்கச் சிந்திக்கத் தெவிட்டாத செந்தமிழின் சுவையைத் தெரிந்த அழகிய அரசன், கற்றார்... இல்லம் - கற்றவர்களுக்கெல்லாம் நல்ல தாய் வீடு போன்றவன், தூய்மை... பெளவம் --தூய்மை மிகுந்த வாய்மைக் கடல் போன்றவன், தெருட்குரி... குன்றம் --தெருட்சிக்குச் சொந்தமாய அருள் என்னும் பெரிய மலை போன்றவன், முத்தி...பிண்டம்- வீட்டினை அளிக்கும் சிவ பத்தியை உடைய உடம்பினன், தன்னலம்...உறையுள் - நல்ல நலங்கள் பலவும் பொருந்தியிருக்கும் இல்லம் போன்றவன், பெரும்புயா... மொழித்தனனாக- பெரிய மார்பாகிய மலையில் வண்டுகள் இருந்து உண்ணும் மலர்மாலை பொருந்திய பொன்னுச்சாமி என்னும் மன்னன் மிகுந்த பெரிய மகிழ்ச்சியுடன் கூறினான் ஆக, களங்கமற... பதித் தனன்- குற்றமற ஆராய்ந்து விளக்கமுற (அச்சில்) பதிப்பித் தனன்,

                 86