பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ளசச தொல்காப்பியம் - இளம்பூரணம் மன்னுஞ் சின்னு மானு மீனும் பின்னு முன்னும் வினையெஞ்சு கிளவியும் அன்ன வியல வென்யனார் புலவர். இஃது, அவ்வீற்று அசைநிலை இடைச்சொல்லும் ஏழாம் வேற்றுமை இடப் பொருள் உணரநின்ற இடைச்சொற்களும் வினையெச்சமும் முடியுமாறு கூறுதல் நூதலிற்று. இ-ள்:-மன்னும் சின்னும் ஆனும் ஈனும் பின்னும் முன்னும் வினையெஞ்சு கிள வியும் - மன் என்னும்சொல்லும் சின் என்னும் சொல்லும் ஆன் என்னும் சொல்லும். ஈன் என்னும் சொல்லும் பின் என்னும் சொல்லும் முன் என்னும் சொல்லும் வினை யெச்சமாகிய சொல்லும், அன்ன இயல என்மனார் புலவர் - மேற்கூறிய இயல்பின வாய் னகரம் றகரமாய் முடியும் என்று சொல்லுவர் புலவர். உ-ம். அதுமற் கொண்கன் றேசே, காப் பும் பூண்டிசிற் கடையும் போகல் என வும்: ஆற்கொண்டான், ஈற்கொண்டான், பிற்கொண்டான்; முற்கொண்டான்; சென் றான், தந்தான், போயினான் எனவும்: வரிற்கொள்ளும்; செல்லும், தரும். போம் எனவும் வரும். பெயராந் தன்மையவாகிய ஆன், ஈன் என்பனவற்றை முற்கூறாததனான், ஆன் கொண்டான்,ஐன்கொண்டான் எனத் திரியாது முடிதலும் கொள்க. பின், முன் என்பன பெயர்நிலையும் வினையெச்சநிலையும் உருபுநிலையும் படும். அவற்றுள் வினையெச்சநிலை ஈண்டுவினையெஞ்சுகிளவியும் என்பதனான் முடியும். உருபு நிலை உருபியலுள் முடியும். ஈண்டுப் பெயர் கூறுகின்றது. அப்பெயரை முன்கூறாதத னால், பின்கொண்டான், முன்கொண்டான் எனத் திரியாமையும் கொள்க. 'இயல்' என்றதனான், ஊன் என்னும் சுட்டு ஊன்கொண்டான் என இயல்பாய் முடிதல் கொள்க. சுட்டு முதல் வயினு மெகரமுதல் வயினும் அப்பண்பு நிலையு மியற்கைய வென்ப. (ஙஅ) இஃது, இவ்வீற்றுள் ஒருசார் ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணர்த்திநின்ற இடைச்சொல்லிற்கு முடிபு கூறுதல் நுதலிற்று. இ-ள்:- சுட்டுமுதல் வயினும் எகரமுதல் வயினு சுட்டெழுத்தினை முதலாக வுடைய வயின் என்னும் சொல்லும் எகரமாகிய முதலையுடைய வயின் என்னும் சொல்லும், அ பண்பு நிலையும் இயற்கைய என்ப-மேல் நகரமாய் முடியுமென்ற அப் பண்பு நிலைபெற்றுமுடியும் இயற்கையுடைய என்று சொல்லுவர். உ-ம். அவ்வயிற்கொண்டான், இவ்வயிற்கொண்டான், உவ்வயிற்கொண்டான் எவ்வயிற்கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் எனவரும். 'இயற்கைய' என்றதனால், திரியாது இயல்பாய் முடிவனவும் கொள்க. கான்கோழி எனவரும். (16) ஙஙகூ. குயினென் கிளவி யியற்கை யாகும். இஃது, இவ்வீற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுதல் நுதலிற்று