பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சகஉ. எழுத்ததிகாரம்,குற்றியலுகரப் புணரியல், ஈரெழுத்து மொழியு முயிர்த்தொடர் மொழியும் வேற்றுமை யாயி னொற்றிடை யினமிகத் தோற்றம் வேண்டும் வல்லெழுத்து மிகுதி. இது, மேற்கூறிய ஆதினுள்ளும் முன்கின்ற இரண்டிக்கும் வேத்துமைப் பொருட்புணர்ச்சி முடிபு கூறுகின்வது. இ-ள்:-ஈர் எழுத்து மொழியும் உயிர்த்தொடர் மொழியும் -ஈர் எழுத்து ஒரு மொழிக் குற்றியலுகர ஈறும் உயிர்த்தொடர்மொழிக் குற்றியலுகர ஈறும், வேற்றுமை ஆயின் - வேற்றுமைப்பொருட் புணர்ச்சியாயின், இன ஒற்று இடைமிக வல்லெழுத்து மிகுதி தோற்றம் வேண்டும் - இனமாகிய ஒற்று இடையிலே மிக வல்லெழுத்துமிகுதி தோற்றி முடிதல் வேண்டும். உ-ம். யாட்டுக்கால்; செவி, தலை, புறம் எனவும்: முயிற்றுக்கால்; சினை,தலை, புறம் எனவும் வரும். "தோற்றம்' என்றதனால், இவ்விரண்டிற்கும் [ஏனைக்கணத்து] இயல்பு கணத்து முடிபு கொள்க. உ-ம். யாட்டுஞாற்சி, முயிற்றுஞாற்சி; நீட்சி, மாட்சி, யாப்பு, வலிமை, அடைவு, ஆட்டம் எனவரும். [மொழி இரண்டும் ஆகுபெயர்.] சக௩. இத்திடை யீனமிக கொழியுகா ருளவே அத்திறத் தில்லை வல்லெழுத்து மிகலே. இஃது,எய்தியது ஒரு மருங்கு மறுத்தல் நுதலிற்று. (*) இ-ள் :- இன ஒற்று இடை மிகா மொழியும் உள - இன ஒற்று இடை [யில்] மிக்கு முடியாத மொழிகளும் உள; வல்லெழுத்து மிகல் அ திறத்து இல்லை - வல் லெழுத்து மிக்கு முடிதல் அக்கூற்றுள் இல்லை. உ-ம். நாகுகால்; சினை, தலை, புறம் எனவும்: வாகு கதிர்; சினை, தலை, புறம் எனவும் வரும். 'அத்திறம்' என்றதனால், உருபிற்கு எய்திய சாரியை பொருட்கு எய்தியவழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. யாட்டின்கால், முயிற்றின்கால், நாகின்கால், வர கின்கால் எனவரும். ['ஆர்' அசை. ஏகாரம் இரண்டும் ஈற்றசை.) சகச. இடையொற்றுத் தொடரு மாய்தத் தொடரும் நடையா யியல வென்மனார் புலவர். இஃது, இடை நின்ற இரண்டிற்கும் முடிபு கூறுகின்றது. (எ) இ-ள்:-இடை ஒற்றுத்தொடரும் ஆய்தத்தொடரும் நடை - இடை ஒற்றுத் தொடர்மொழிக் குற்றியலுகர ஈறும் ஆய்தத்தொடர்மொழிக் குற்றியலுகர ஈறும் நடக்கும் இடத்து, அ இயல என்மனார் புலவர் - மேற்கூறிய இயல்பு முடிபினை உடைய என்று சொல்லுவர் புலவர். 18