பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் குற்றியலுகரப் புணரியல். ளசக டும்- ஆய்தப்புள்ளி (முன்பு போலக் கெடாது) நிலைபெற்று முடிதல் வேண்டும், அல் வழியான் - அல்வழியின்கண். உ-ம். அஃதடை, இந்தடை, உஃதடை; ஆடை, இணை என ஒட்டுக. 'முன்' என்றதனான், வேற்றுமைக்கண்ணும் உயிர் முதல் மொழி வந்த இடத்து அஃதடைபு, அஃதாட்டம் என ஓய்சிம் கெடாமை கொள்க. ('ஆன்' என்பது வேற்றுமை மயக்கம். அகரம் சாரியை ] சுஉரு. எனைமுன் வசினே தானிலை யின்றே (கஅ) இது, மேலனவற்றிற்குப் பிறகணத்தோடு முடிபு கூறுதல் முதலிற்று இ-ள்:-எனை முன்வரின் தான் நிலையின்று -(அச்சுட்டுமுதல் உகர ஈறு உயிர்க் கணம் ஒழிந்த) பிற கணங்கள் முன்வரிண் அவ் ஆய்தம் நிலையின்றி முடியும். உ-ம். அது கடிது, இது கடிது, உது கடிது; சிறிது, தீது, பெரிது; ஞான்றது, மாண்டது; யாது, வலிது எனவரும்.[முன்னைய ஏகாரம் அசை. பின்னையது நீண்ட ஈற்றசை.) டது, சஉகூ அல்லது கிளப்பி னெல்லா மொழியும் சொல்லிய பண்பி னியற்கை யாகும். இஃது, ஆறு ஈற்றுக் குற்றியலுகரத்திற்கு அல்வழி முடிபு கூறுதல் நுதலிற்று. இ-ள் :- அல்லது கிளப்பின் - அல்வழியைச் சொல்லும் இடத்து, எல்லா மொழி யும் - ஆறு ஈற்றக்குற்றியலுகரமும், சொல்லின் பண்பின் இயற்கை ஆகும் - மேற் சொல்லிய பண்பினையுடைய இயல்பாய் முடியும். - உ-ம். நாகு கடிது,வரகு கடிது, தெள்கு கடிது, எஃகு கடிது, குரங்கு கடிது; சிறிது, தீது, பெரிது எனவரும். 'எல்லா மொழியும்' என்றதனால், வினைச்சொல்லும் வினைக்குறிப்புச்சொல்லும் இயல்பாய் முடிந்தன கொள்க. கிடந்தது குதினா, கரிது குதிரை எனவரும். 'சொல்லிய' என்றதனான், இருபெயரொட்டுப் பண்புத்தொகை முடிபு கொள்க. காட்டுக்கானம், குருட்டெருது எனவரும். "பண்பின்" என்றதனான், ஐ என்னும் சாரியை பெற்று வரும் அல்வழி முடிபும் கொள்க. அன்றைக்குத்தன், பண்டைச் சான்றார், ஒர் யாட்டை யானை, மற்றை யானை எனவரும். (உய) சஉஎ. வல்லொந்துத் தொடர்மொழி வல்லெழுத்து மிகுமே. இஃது, அவ் ஈற்றுள்ளும் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று. இ-ள்:- வல்லொற்றுத்தொடர்மொழி - வல்லொற்றுத்தொடர்மொழிக் குற்றிய லுகரம், வல்லெழுத்து மிகும் - (வல்லெழுத்து வருவழி) வல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம்- கொக்குக்கடிது சிறிது, தீது, பெரிது எனவரும். ['வல்லொற்றுத்தொடர்மொழி" என்பது ஆகுபெயர். 'ஏகாரம் ஈற்றசை.) (உக)