பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம்-நூன்மரபு CT ஓராற்றால் தொகுத்து உணர்த்துதலின், நூன்மரபு என்னும் பெயர்த்து. இதனுட் கூறுகின்ற இலக்கணம் மொழியிடை [நின்ற] எழுத்திற்கன்றி, தனிநின்ற எழுத்திற்கென உணர்க. க. எழுத்தெனப்படுப் அகரமுத னகர விறுவாய் முப்பஃ தென்ப சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே. இத்தவேச்சூத்திரம் என் அதலிற்றே வெனின், எழுத்துக்களது பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் :- எழுத்து எனப்படுப-எழுத்தென்று சிறப்பித்துச் சொல்லப்படுவன, அகரம் முதல் னகர இறுவாய் முப்பஃது என்ப-அகரமாகிய முதலை யுடையனவும் னகரமாகிய இறுவாயினையுடையனவுமாகிய முப்பதென்று சொல்லுப (ஆசிரியர்) ; சார்ந்து வால் மரபின் மூன்றும் அலங்கடை -சார்ந்து வருதலாகிய இலக்கணத் தினையுடைய முன்றும் அல்லாவிடத்து. ய மூன்றும் ஆனவிடத்து முப்பத்து மூன்று என்று சொல்லுப என்றவாறு. உதாரணம் : அ ஆ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஒ ஒளக்ங்ச்ஞ்ட்ண்த்ந்பம் ய்ர்ஸ்வ்ழன்ற்ன் எனவரும். எனப்படும் என்ற சிறப்பான், அளபெடையும் உயிர்மெய்யும் வரிவடிவும் சிறப்பில்லா எழுத்தாகக் கொள்ளப்பட்டன. அ ஆ என்பன பெயர். முறை அம் முறை, தொகை முப்பது. அவற்றுள், அகரம் தானும் இயங்கித் தனிமெய்களை இயக் குதற் சிறப்பான், முன்வைக்கப்பட்டது. னகாரம் வீடுபேற்றிற்குரிய ஆண்பாலை உணர்த்துதற் சிறப்பான் பின்வைக்கப்பட்டது. தொகை [யென்பது] தொகையுட் டொகையும், தொகையுள்வகையும், தொகையுள்விரியும், வகையுட்டொகையும், வகையுள்வகையும், வகையுள்விரியும், விரியுட்டொகையும், விரியுள்வகையும், விரி யுள்விரியும் என ஒன்பதுவகைப்படும். எழுத்தென்பது தொகையுட்டொகை. முப்பதென்பது அதன் வகை. முப்பத்துமூன்றென்பது அதன் விரி. முப்பதென் பது வகையுட்டொகை. முப்பத்துமூன்றென்பது அதன் வகை. அளபெடை தலைப் பெய்து நாற்பதென்பது அதன் விரி. முப்பத்துமூன்றென்பது விரியுட்டொ நாற்பதென்பது அதன் வகை. உயிர்மெய் தலைப்பெய்து இருநூற்றைம்பத்தாறென் பது அதன் விரி, செய்யுனின்பம்கோக்கி வகரம் நீக்கிப் பசரம் இடப்பட்டது. அகரமுதல் னசரலிதுவாய் என்ன, மேல் கின்றன'. உ. அவைதாம் இருபெயரொட்டாகுபெயரான் குற்றியளிகாரம் குற்றிய காம் ஆய்த மென்ற முப்பாற் புள்ளியு மெழுத்தோ ரன்ன. ாகை முப்பதன் (க) இது, மேல்சார்ந்துவரும் என்னப்பட்ட மூன்றற்கும் பெயரும் முறையும் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் :- அவைதாம்-மேற் சார்ந்துவரும் எனப்பட்டவைதாம், குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற முப்பால் புள்ளியும்-குற்றியலிகரமும் குற்றியலுகர மும் ஆய்தமும் என்றுசொல்லப்பட்ட மூன்று கூற்றதாகிய புள்ளியும் என இவை.