பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஏழாவது-உயிர்மயங்கியல் இவ்வோத்து என்ன பெயர்த்தோவெனின், உயிரீறு வன்கணத்தொடும் சிறு பான்மை பிறகணத்தொடும் மயங்கிப் புணரும் இயல்பு உணர்த்தலின் உயிர்மயங்கி யல் என்னும் பெயர்த்து. மேல் உருபு புணர்ச்சி கூறி ஈண்டுப் பொருட்புணர்ச்சி கூறு கின்றமையின், மேலதனோடு இயைபுடைத்தாயிற்று. உறஙு. அகர விறுதிப் பெயர்நிலை முன்னர் வேற்றுமை யல்வழிக் கசதபத் தோன்றின் தத்த மொத்த பொரத்திடை மிகுமே. இத்தலைச் சூத்திரம் என் நுதலிற்றோவெனின், அகரவீற்றுப்பெயர்க்கு வன் கணத்தோடு அவ்வழிமுடிபு கூறுதல் நுதலிற்று. இ-ள்:-அகர இறுதி பெயர்நிலை முன்னர்-அகரமாகிய இறுதியையுடைய பெயர்ச் சொல்முன்னர், வேற்றுமை அல்வழி கசதப தோன்றின்-வேற்றுமையல்லாத அல்வழிக்கண் க ச த ப முதல்மொழி வருமொழியாய்த் தோன்றின், தம் தம் ஒத்த ஒற்று இடை மிகும் - தத்தமக்குப் பொருந்தின அக் க சதபக்களாகிய ஒற்று இடைக் கண் மிகும். உ-ம். விளக்குறிது, மகக்குறிது; சிறிது, தீது, பெரிது எனவரும். 'ஒத்த' ஒற்றென்னா 'தத்தம்' என்றதனான், அகரவீற்று, உரிச்சொல் வல்லே ழுத்துமிக்கும் மெல்லெழுத்துமிக்கும் முடியும் முடிபும், இடைச்சொற்களுள் எடுத் தோதாதவற்றின் முடிபும், அகரம் தன்னை உணரநின்றவழி முடியும் முடிபும்கொள்க. தடக்கை, தவக்கொண்டான் என இவை உரிச்சொல்வல்லெழுத்துப்பேறு. தடஞ்செவி, தடந்தோள் என இவை மெல்லெழுத்துப்பேறு. "மடவ மன்ற தடவு நிலைக் கொன்றை" என்பது இடைச்சொல் முடிபு. அக்குறிது, சிறிது, தீது, பெரிது என்பது தன்னை உணரநின்றவழி வல்லெழுத்து மிகுதி. அவ்யாது என்பது இடை யெழுத்து மிகுதி. அவ்வழகிது என்பது உயிர்க்கணத்து முடிபு. உச. வினையெஞ்சு கிளவியு மூவமக் கிளவியும் எனவெ னெச்சமுஞ் சுட்டினிறுதியும் ஆங்க வென்னு னு முறையசைக் களவியும் ஞாங்கர்க் கிளந்த வல்லெத்து மிகுமே. (க) இஃது, அகரவீற்று வினைச்சொல்முடிபும் இடைச்சொல்முடிபும் கூறுதல் நுதலிற்று. இ-ள்:-வினையெஞ்சு கிளவியும் உவமக்கிளவியும்-அகரவீற்று வினையெச்சமா கியசொல்லும் உவமச்சொல்லும், என என் எச்சமும் சுட்டின் இறுதியும்-என என்று வருகின்ற எச்சச்சொல்லும் சுட்டாகிய அகரவீறும், ஆங்க என்னும் உரையசைக் கிளவியும் -ஆங்க என்று சொல்லப்படும் உரையசையாகிய சொல்லும், ஞாங்கர் கிளந்த வல்லெழுத்து மிகும். மேலைச்சூத்திரத்துச்சொன்ன வல்லெழுத்து மிக்குமுடியும்.