இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
39 ஒற்றுமை வழியொன்றே வழியென்ப தோர்ந் திட்டோம்,நன்கு தேர்ந்திட்டோம். மற்று நீங்கள் செய்யுங் கொடுமைக்கெலாம் மலைவுறோம், சித்தம் கலைவுறோம். சதையைத் துண்டு துண்டாக்கினு முன்னெண்ணம் சாயுமோ? ஜீவன் ஓயுமோ? இதையத் துள்ளே யிலங்கு மஹாபக்தி யேகுமோ? நெஞ்சம் வேகுமோ? என் வகையார்கள் மீது கொண்டு வரப் பட்ட வழக்கில் எங்கள் பக்கம் வக்கீல்களாக ஆஜரான திருநெல்வேலி வக்கீல்களான சாது கணபதி பந்துலு, கணபதி ராமய்யர், டி.வி.கிருஷ்ணசாமி ஐயர், ஸ்ரீவை குண்டம் டி.ஆர். மகாதேவய்யர், சிவராம கிருஷ்ணய்யர் முதலிய தேசபக்தர்களுடன் சாது கணபதி பந்துலு ஆபீஸ் மேடையில் மாமாவும், மற்றச் சென்னை நண்பர்களும் ஒரு வாரத்திற்கு மேலாகத் தங்கி வழக்கின் நடவ டிக்கைகள், நடந்த வேடிக்கைகள் ஆகிய வற்றைப் பார்த்துத் தமாஷாகச் சம்பாஷணை