பக்கம்:1946 AD-வி. ஓ. சி. கண்ட பாரதி.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57


பின்னர் அவ்வப்போது சென்னையில் நான் 'சுதேசமித்திரன்' பத்திரிகை ஆபீசுக்குப் போயிருந்த சமயங்களிலெல்லாம் அங்கு உதவி ஆசிரியராக இருந்த மாமாவைக்கண்டு பேசி யிருக்கிறேன். அருமை மாமாவின் எழுத் துக்கள் 'மித்திரன்' வாயிலாக எனக்கு ஆனந்தம் ஊட்டி வந்தன. மாமா மறைந்தார் ; மாண்பு மணத்தது! கொஞ்ச நாளில் மாமா காலஞ் சென்ற செய்தி கேட்டுத் திடுக்கிட்டேன். துக்கக் கட லில் ஆழ்ந்து தத்தளித்தேன். 'நல்லார்க்கு அதிக காலம் இல்லை போலும்!' என நினைத் தேன். மாமா இவ்வுலகைவிட்டு மறைந்து விட்டாலும் அவரது தேசீய கீதங்களும், மற்றைய பாடல்களும், கதை - கட்டுரைகளும் இவ்வுலகம் உள்ளளவும் ; நிலைத் துப் புகழ் வீசும் என்பதில் ஐயமில்லை. அவருடைய பெயர் தேசாபிமானிகளுடைய சரிதத்தில் மட்டுமல்லா மல் கவிதா - மேதைகளின் சரிதத்திலும் வைரம் என ஒளிவிடும்.